மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. யோசப் பொன்னையாஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக கத்தோலிக்க ஒன்றிய ஆன்மீக இயக்குனரும் மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்பணி கலாநிதி. F.X. டயஸ், கோட்டைமுனை சேகர மெதடிஸ்த திருச்சபை முதன்மைக்குரு வணபிதா A.சாமுவேல் சுபேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க. பிறேம்குமார்,சிரேஸ்ர உதவிப் பதிவாளர் A.J.கிறிஸ்டி கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களது பாடல் நடன நாடகநிகழ்வுகளால் நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற்றன.
மிகச் சிறப்பான முறையில் மண்டபம் வடிவமைப்பு செய்யப்பட்டிருந்ததுடன்,குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாக கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதன்முறையாக மண்டபத்தினுடைய முழுமையான அலங்கரிப்பு கட்புலதொழில்நுட்பமுறை மூலம், நிகழ்வுகளுக்கு ஏற்ப கட்புலகாட்சிகளுடனும் காட்சிப்படுத்தப்பட்டமை எல்லோராலும் வியந்து பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது