12/04/2013

| |

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவரைபு

DSC_0121
அதாவது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் பல திணைக்களங்கள் உள்ளன இது வரையில் வீடமைப்பு அபிவிருத்திக்கு என்று எதுவித திணைக்களமும் இல்லை. எனவே எமது அமைச்சின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்ற துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு நிர்மாணமும் என்ற துறையானது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒர்; மிகவும் முக்கியமான துறையாகும், மக்களினது வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், உள்நாட்டு வெளிநாட்டு வளங்களை பெற்று வீடமைப்பு வசதிகளை தகுந்த முறையில் எம் மாகாண மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கும் இத்துறை மூலமான நடவடிக்கை மிக அவசியமாகும.; என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன விடமைப்பு கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஒன்றினை தனியாக உருவாக்குவது தொடர்பான சட்டவரைபு ஒன்றினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர்மேலும் பேசும்போது குறிப்பிட்டதாவது;
எமது அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்ற துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் போன்ற துறைகளுக்கு எமது அமைச்சின் கீழ் தனித்தனியாக திணைக்களங்கள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக சம்பந்தப்பட்ட வேலைகள் செயற்படுத்தப்பட்டு வருவதனால், சகல வளங்களையும் இத்திணைக்களங்களின் எமது அமைச்சின் ஊடாக பெற்று திணைக்களங்களின் ஊடாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் வீடமைப்பு நிர்மாணமும் என்ற துறையானது எமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒர்; மிகவும் முக்கியமான துறையாவும், மக்களினது வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், உள்நாட்டு வெளிநாட்டு வளங்களை பெற்று வீடமைப்பு வசதிகளை தகுந்த முறையில் எம் மாகாண மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கும் இத்துறை மூலமான நடவடிக்கை மிக அவசியமாகும்.
இருந்தும் இவ்வீடமைப்பு துறைக்குரிய ஒரு தனியான ஒர்; நிறுவனம் எமது அமைச்சின் கீழ் இதுவரை காலமும் உருவாக்கப்படாத காரணத்தினால் இத்துறை மூலமான நடவடிக்கைகளை உரிய முறையில் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் வளங்களை எமது அமைச்சின் ஊடாக உரிய முறையில் பயன்படுத்துவதிலும் பெறும் தடைகள் காணப்படுகின்றன.
எனவே எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் வீடமைப்பு சம்மந்தமான சகல செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாணத்தின் எனைய அமைச்சுக்களின் ஊடாக வரும் வீடமைப்பு சம்மந்தமான திட்டங்களையோ அல்லது இது சம்மந்தமான வளங்களையோ வெளிநாட்டு நிதி உள்ளடங்களாக பெற்று எமது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஒன்றினை தனியாக எமது அமைச்சின் கீழ் உருவாக்குவது அவசியமாதலால் அதற்கான சட்டவரைபு ஒன்றினை சபையின் அனுமதிக்காக கோரி நிற்கின்றேன். ஏனத்தெரிவித்தார். இச்சட்ட விடயமானது மகாண சபை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதியினையும் கிடைககப் பெற்றுளதாக தெரிவித்தார்.
DSC_0155DSC_0148