12/10/2013

| |

மிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா

கல்குடா கல்வி வலயத்தின் மிறாவோடை தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த 
பரிசளிப்பு விழாவும்இ "விருட்சம்" சஞ்சிகை வெளியீடும் இன்று (10.12.2013)  பாடசாலையின்
 அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும்இ ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான
 சிவனேசதுரை - சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் அதிதிகளாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களும்
கோட்டக் கல்வி அதிகாரி என்.குணலிங்கம் அவர்களும்  கலந்துகொண்டதுடன் பாடசாலை 
அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள்இ பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.