12/24/2013

| |

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொரு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வி

 நாவிதன்வெளிப் பிரதேச சபையின் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்களிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் அ.ஆனந்தன் அவர்கள் எதிர்த்து வாக்களித்ததன் காரணமாக மேற்படி வரவு-செலவு திட்டம் தேல்வியடைந்துள்ளது.
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று காலை 9 மணிக்கு தவிசாளர் சி.குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
இப்பிரதேச சபையில் மொத்தம் 7 உறுப்பினர்களில், 4 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்கள் முஸ்லிம் கங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தமிழ்த் சேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தெரிவாகி உப தவிசாளராக உள்ள அ.ஆனந்தனும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததன் காரணமாக மேற்படி வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.