12/02/2013

| |

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்கொலை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் மண்முனை மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் இன்று மதியம் விளாவெட்டுவானில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விளாவெட்டவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விளாவெட்டுவானில் உள்ள சவற்காலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றிலேயே இவர் தூக்கில் தொங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.