வரலாற்றில் முதற் தடவையாக காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்றைய (புதன்) அமர்வில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (புதன்) பிரதேச சபை மாதாந்த அமர்வு தவிசாளர் செ. இராசையா தலைமையில் நடைபெற்றபோது ஏனைய நால்வரும் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள இச்சபையில் தவிசாளர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது உபதவிசாளர் கே. தட்சணாமூர்த்தி, உறுப்பினர்களான வை. கோபிகாந், சு. பாஸ்கரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். ஏ. பாயிஸ் ஆகியோர் எதிராக கருத்துரைத்தனர்.
தங்களுடன் கிஞ்சித்தும் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக பட்ஜெட்டைத் தயாரித்தமை, சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவது போன்ற காரணங்களை யிட்டே தாம் இப்பட்ஜெட்டை எதிர்த்ததாக உப தவிசாளர் கே. தட்சணா மூர்த்தி தெரிவித்தார். 14 தினங்களுள் மீண்டும் திருத்தி சபையில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.