12/16/2013

| |

சுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கெளரவிப்பு.

ம‌ட்டக்களப்பு மாநகர சபையினால் சுவீடனில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சிவாநந்தா தேசிய பாடசாலை
மாணவர்கள் ‌கெளரவிப்பு.
ம‌ட்டக்களப்பு மாநகர சபையினால் 12.12.2013 இன்று நடைபெற்ற உள்ளுராட்சி வாரம் - 2013 இறுதி நிகழ்வு விமர்சையாக ம‌ட்டக்களப்பு மாநகர சபை ஆணையார் திரு. K. சிவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதியளும் ‌ஞாபச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் Norwegian Institute of Water Research ( NIVA) , University of Moratuwa -Sri Lanka, United Nations Human Settlement (UNHABITAT) & Batticaloa Municipal Council (BMC) இனால் நடாத்தப்பட்ட Climate Resilient Action Plans for Coastal Urban Areas for SriLanka என்னும் காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ போட்டியில் 1ம் இடத்தை பெற்று இதன் மூலம் நடைபெற்ற UN-Habitat Cities and Climate Change Initiative (CCCI) Blogging & Social Media International Competition, EcoMobility World Festival Congress, Suwon, South Korea 2013 என்னும் சர்வதேச போட்டியில் ‌உலகளாவிய ரீதியில் 1ம் இடத்தை பெற்றும் Stockholm Junior Water Prize 2013 என்னும் நீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு புத்தாக்கங்கள் மூலம் தீர்வு காணுதல் போட்டியில் தேசிய ரீதியில் 1ம் இடத்தைப் பெற்று சுவீடன், ஸ்டோக்கோம் மாநகரில் நடைபெற்ற Stockholm Junior Water Prize & World Water Week Congress 2013 ற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிஷோத் நவ‌ரெட்ணராஜா (Kishoth Navaretnarajah) மற்றும் Junior Water Prize & World Water Week Congress 2013 பங்கு பற்றிய செல்வன். கிஷாந் சாந்தலிங்கம், வித்தியாகரன் நடராஜா ஆகியோரும் ‌ம‌ட்டக்களப்பு மாநகர சபை ஆணையார் திரு. K. சிவநாதன் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி. சுபா சக்கரவர்த்தி அவர்களாலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
எம்மண்னிற்கு பெருமை சேர்த்த ‌மைந்தர்களை வாழ்த்துகின்றோம்.