இன, மத பேதங்கள் மறந்து எல்லோர்மீதும் அன்பும் இரக்கமும் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்' முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்கள் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
இயேசுநாதன் அவதரித்த தினமாக உலகெங்கும் பரந்துவாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் இயேசுவால் போதிக்கப்பட்ட கருணை, அன்பு, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் அனைவரும் வேறுபாடுகளைக் கழைந்து ஒற்றுமையுடன் வாழ முயற்சிக்கவேண்டும்.
எமது நாட்டில் , எமது பிரதேசத்தில் இல்லாத வளமில்லை என்னும் அளவிற்கு வளங்கள் பரந்து கிடக்கின்றன. அதனை பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். அப்போதுதான் வறுமை என்னும் கொடுமை அழிவடைந்து போகும். அந்த நிலை ஏற்படுகின்றபோது அனைவருக்கும் வாழ்வில் நிலையான மகிழ்ச்சி ஏற்படும்.
எனவே இந்த இனிய நன்னாளில் எமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை களைந்து ஒவ்வொருவரையும் தமது உறவினராக நினைத்துப் பார்க்கின்ற அளவிற்கு எமது மனங்களில் எண்ணங்கள் வேரூன்றுகின்றபோதூன் தற்போது உருவாகியிருக்கும் சமாதானமான நிலை நிலைத்து அழியாத நிலையில் இருக்கும் என்றுகூறி, கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களில் இணைந்திருக்கும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.
சிவனேசதுரை – சந்திரகாந்தன்
;(தலைவர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , முன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் )