12/10/2013

| |

மண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் துக்கதினமாக அரசு பிரகடனம்

தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பு இன ஜனாதிபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி இன்று 10ஆம் திகதி, நாளை 11ஆம் திகதிகளை துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது. அன்றைய தினம் அரச அலுவலகங்களிலும் ஏனைய இடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
நிறவெறிக்கு எதிராக போராட்டம் நடத்திய நெல்சன் மண்டேலா கடந்த 5ஆம் திகதி தனது 95ஆவது வயதில் காலமானார். மண்டேலாவின் மறைவுக்கு ஜனாதிபதி தனது அனுதாபத்தை வெளியிட்டி ருந்ததோடு பாராளுமன்றத்திலும் அவருக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 14ஆம் திகதி அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதோடு இலங்கை சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடங்கலான முக்கியஸ்தர்கள் மண்டேலாவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக தென்ஆபிரிக்கா செல்கின்றனர். இந்த நிலையிலேயே மண்டேலாவின் மறைவையொட்டி இலங்கையில் இரு தினங்கள் துக்கதினங்களாக அனுஷ்டிக்கப்பட உள்ளன.