12/14/2013

| |

சிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்

சிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பை சேர்ந்த மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தர தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மிச்சேல் அக்ஷா சேரன்; என்கின்ற மாணவியே இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விப் பிரிவில் இரண்டாம் தேசிய மொழி அலகினாலேயே இந்த பரீட்சை நடத்தப்பட்டது.
இந்த மாணவிக்கான சான்றிதழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அண்மையில்  கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது வழங்கப்பட்டது.