12/18/2013

| |

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாமல் திறைசேரிக்கு திரும்பிய நிதி

கிழக்கு மாகாணசபை 4,046 மில்லியன் ரூபா நிதியையும் வடக்கு மாகாணசபை 3526 மில்லியன் ரூபா நிதியையும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளன.
கடந்த 2012ம் ஆண்டு அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு 12,577 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், 8531 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், எஞ்சிய 4,046 மில்லியன் ரூபா திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட 10,153 மில்லியன் ரூபா நிதியில் 6627 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய 3526 மில்லியன் ரூபா நிதி மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விபரம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உள்ளூராட்சி மாகாணசபைகள் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போது பாராளுமன்றத்தில் இந்தப் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.