12/10/2013

| |

வடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை வளர்ப்பு பிள்ளையாகவும் நோக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராபட்சம் அம்பலம்

வடக்கு – கிழக்கு இணைந்த தாயகமே  தமிழர்களுக்கான தீர்வு என்று கோசம் எழுப்பிக்கொண்டு மக்களிடம் வாக்குக் கேட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது வடக்குத்தான் தமது தாயகம் என்றும் கிழக்கு மாகாணமானது தமது தேவக்கு மாத்திரம்தான் என்று கூறுமளவிற்கு தனது செயற்பாடுகளின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களையும் கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அரசியல்வாதிகளையும் தனது வேலை நேரத்தில் பயன்படுத்தி விட்டு, மற்றை நேரத்தில் கைகழுவி விடுகின்ற செயற்பாட்டினையே மேற்கொள்கின்றது என்பதனை கடந்த கிழக்கு மாகாண சபை, வடக்கு மாகண சபை தேர்தல்கள் அதன் பின்னர் இடம்பெற்று வரும் நடவடிக்கைகளும் எடுத்துகாட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மக்களை கைகழுவி விடும் செயற்பாட்டிற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சம்பவத்தினை எடுத்துநோக்குவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கொள்கையாக குறிப்பிடப்படும் வடக்கு – கிழக்கு இணைந்த ஆட்சி என்ற கோசத்தை தனது சுயநல நோக்கத்திற்காக தூக்கி எறிந்துவிட்டு தமிழ்முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி ஆபத்து வேளைகளில் ஒருவர் கூட வடக்கிலிருந்து வராதபோதும், தேர்தலின்போது தலைமை உட்பட ஒரு பட்டாளமே படையெடுத்து வந்தது.
தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மிகவும் தெளிவாக தெரிந்த ஒரு விடயம் இருந்தும் முன்னாள் முதல்வராகவிருந்த சந்திரகாந்தனை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக  இறுதிவரையிலும் தனது சதிவேலையினை செய்திருந்தது. சந்திரகாந்தனை மக்களின் வாக்குப்பலத்திலிருந்து வீழ்த்தாவிட்டாலும் தான் நினைத்ததைப் போன்று தனது தமிழன் ஆழ வேண்டிய மகாணசபையை முஸ்லிம் இனத்திற்கு தாரை வார்த்துக்கொடுத்தது. ஏனெனில் கிழக்கு வாழ் தமிழ் மக்களையோ அல்லது கட்சியின் ஆதரவாளர்களையோ ஒரு பொருட்காகக் கூட நினைத்ததில்லை.

அடுத்தது நாம் வடமாகாண சபைத் தேர்தலும் அதற்குப் பின்னரான நடவடிக்கைகளையும் ஆராய்வோம்.  வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெல்லும் என்பது ஏற்pகனவே அறிந்த விடயம் ஏனெனில் தமிழர்களின் சதவீத அளவு வடமாகாணாத்தில் கிழக்கு மாhணண்தைப் போன்றல்லாமல் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த நிலையில் வெல்லமுடியும் என்ற மமதையில் வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றியும் கண்டது. உண்மையில் இந்த வேளையில் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். கடந்த கிழக்குமாகண சபைத் தேர்தல் காலத்தில் கிழக்கில் செலவிட்ட நிதியையும் பார்க்கிலும் பலமடங்கு நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமை வாரி இறைத்திருந்தது. காரணம் வடக்கையே தமது சொந்த பிள்ளை போன்றும் கிழக்கு மாகாணத்தை தமது வளர்ப்புப் பிள்ளை போன்றுமே புறமொதுக்கி பார்ப்பதுமே ஆகும்.

வடக்கு மகாணசபை வெற்றியைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது இலக்கு நிறைவேறி விட்டதுபோன்ற தோறணையிலே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி இன்று சர்வதேச நாடுகளின் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கு  தமது பிரச்சினைகளை அறிவிக்கும்போது வடமாகாணத்தைப் பற்றிய பிரச்சினைகளையே முற்றுமுழுதாக எடுத்துக்காட்டுகின்றதே தவிர கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியோ ஏணைய பிரச்சினைகள் பற்றியோ வாய்திறந்து பேசுவதாக இல்லை என்றே கூறலாம். இந்த விடயம் தொடர்பாக நாம் ஒரு வினாவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கலாம்.
கிழக்கு மாகாண தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக தற்போது வாய்திறக்காமல் இருப்பதானது, இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் சிறந்த வாழ்வாதாரத்துடனும் வாழ்கின்றார்களா? அப்படியானால தற்போது முஸ்லிம் ஒருவரின் ஆடசியிலே இப்படி வாழ்வதாயின் இதற்குமுன்னர்  சிறந்த நிலையில் முன்னைய முதல்வரின் ஆடசிக்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்நிதிருப்பாகள்தானே? அப்படியானால் அத்தகைய தமிழ் மக்கள் மிகச் சிறந்த முறையில் வாழ்ந்த நிலையினைக் குழப்புவதற்காகவா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?

இரண்டாவது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பாக தாங்கள் அக்கறை காட்டாமையானது, அவர்களை மாற்றான தாய் பிள்ளைபோன்று பார்க்கும் மனப்பாங்கிலா? அதாவது தங்களுக்கு வடமாகாணம்தான் முக்கியம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அது எப்படிப்போனாலும் பரவாயில்லை என்ற நோக்கத்திலா?
சற்று சிந்தியுங்கள். கிழக்கு மாகாண மக்கள் தொடர்பாக அதிகாரிகளிடமோ அல்லது ஊடகங்களுக்கோ கருத்துவெளியிடாமல் இருப்பது மேலே கூறப்பட்ட இரண்டு காரணங்களில் ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கும். அந்தவகையில் பார்த்தாலே ஒட்டடுமொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கிழக்கு மக்களுக்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்ற விடயம் இதற்கூடாக அம்பலப்படுவதனை அறியலாம்.
கடந்த சில நாளில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்கள் கூட 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண தமிழ் மக்களை புறக்கணித்து வருகின்றது' என்பது தொடாபாக தனது கவலையை வெளியிட்டிருந்தார். இவருக்கு தற்போதுதான் ஞானம் வெளிப்பட்டிருக்கின்றது.; ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண தமிழ் மக்களை ஒரு கறிவேப்பிலையாகத்தான் நினைத்து வருகின்றது என்பது கடந்த கால வரலாறு தெரிந்தவாகளுக்கு நன்கு தெரிந்த ஒரு விடயமாகும்.
'ஏமாறுபவாகள் இருக்கும்வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்' என்ற கூற்றை நினைவில் வைத்து கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தெமளிவாகச் சிந்திக்கின்றபோதே அரசியல் ரீதியிலான இலாபத்தை பெற்றுக்கொண்டு தமது வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ளமுடியும்.

ஒருகணம் இதைப்பற்றி சிந்திக்குமா கிழக்கு வாழ் தமிழ் இனம்?.....

-    ஆராவாணன் -