12/23/2013

| |

கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மாணவர்கள்.
இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 19வது இடத்தையும் பெற்றுள்ளதோடு, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் றஹ்மதுல்லாஹ் ஜின்தா நவாஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 52வது இடத்தையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், காத்தான்குடிக்கும், பாடசாலைக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளனர்.
இதில் மட்டு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவியின் தந்தை வெள்ளத்தம்பி கல்முனையில் பாதணிகள் விற்பனை நிலையம் வைத்துள்ளதோடு, மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவரின் தந்தை காத்தான்குடியில் இருந்து வெளியாகும் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் றஹ்மதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.