11/16/2013

| |

TMVP முன்னாள் தலைவர் நந்தகோபனின் 05வது ஆண்டு நினைவு தினம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபனி;ன் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று வியாழக்கிழமை காலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள்,நந்தகோபனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இதன்போது நந்தகோபனின் உருவப்படத்துக்கு விளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.