11/07/2013

| |

கைவினை உள்ளுர் உற்பத்தி திறன்கள் பற்றிய கருத்து முன் வைப்பும் கருத்து பகிர்வும்

மட்டக்களப்பு மாவட்டதின் கைவினை உள்ளுர் உற்பத்தி திறன்கள் பற்றிய கருத்து முன் வைப்பும் கருத்து பகிர்வும் இன்று (05.11.2013) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வானது இரன்டு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில் முதலாவது அமர்வு பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உள்ளுர் உந்பத்திகளான வெண்கலப் பொருட்கள் பற்றியும் அதன் பாவனைகள்பற்றியும் சிரேஸ்ட விரிவுரையாளர் வ.இன்பமோகன் அவர்களும் , பன் புல் மற்றும் அதனோடிணைந்த கைவினைப் பொருட்கள் பற்றி விரிவுரையாளர் த.விவேகானந்தராசா அவர்களும் மட்பாண்டமும் அதன் பாவனைப் பொருட்கள் பற்றி அதிபர் கு.சண்முகம் அவர்களும் தங்க ஆபரணங்களும் அதன் உற்பத்திகள் பற்றியும் சேவைக்கால ஆலோசகர் திருமதி வனித்தா சுரேஸ் அவர்களளும் ஆய்வுரை நிகழ்தினர்.
 
கைவினை உள்ளுர் உற்பத்தி திறன் கருத்து முன்வைப்பும்  கருத்துப் பகிர்வும் இநிகழ்வின் இரண்டாவது அமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பமாகியது. 
இரண்டாவது அமர்வினை தொல்லியலாளர் செல்வி.க.தங்கேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.
 
இதன்போது பிரம்பு உற்பத்தி அதன் பாவனைப் பொருட்கள் தொடர்பாக ஆசிரியர் து.கௌரீஸ்வரன் அவர்களும் , தும்பு உற்பத்தி அதன் செயற்பாட்டு பெருட்கள் பற்றி மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்செல்வன் அவர்களும் , மரச்செதுக்கல் வேலைப்பாடுகள் பற்றி விரிவுரையாளர் ஆர்.ஸ்ரான்ஸி பிரபாகரன் அவர்களும் நிகழ்தினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கைவினை உள்ளுர் உற்பத்தியாளர்கள் ஆய்வாரள்கள், என பலர் இந்நிகழ்வில் கலந்து கொடிருந்தனர்.