(மட்டு நிருபர்)
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக பல் வேறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் இரண்டு பேரை பொலிசார் கைது
செய்துள்ளதுடன் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பெறுமதி வாய்ந்த பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக நவரத்ன தெரிவித்தார்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து கும்புறுமூலை ஸ்ரீ மாணிக்கபிள்ளையர் ஆலயம், பட்டியடிச்சேனை நாகதம்பிரான் ஆலயம் மற்றும் தனியார் வீடுகளில் களவாடப்பட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது எதிவரும் 29.11.2013 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.