கட்சிக்கு நேற்று வந்த அரசியல் பால்குடிகளின் கைப்பொம்மையாக மாறியுள்ளார் சம்பந்தன் -சங்கரி
நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள் தமிழரசுக்கட்சித் தலை வர்கள்!
சம்பந்தனும், அவரது சகாக்களும தமிழ் மக்களால் குட்டுப் படத் தொடங்கி விட்டார்கள் எனவும், அவ்வாறு அவர்கள் குட்டுப்படத் தொடங்கியமை மூடி மறைக்கப்பட்டு வருவதா கவும், எனினும் த.தே.கூ சம்பந்தனும், அவரது சகாக்களும் தமது தவறுகளை உணர்ந்து மக்கள் முன்பாக மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
மேலும் ஒருசில தமிழ் ஊடகங்கள் என்று இவர்களுக்குத் தாளம் போடுகின்றன் என வும், எவ்வாறாயினும் இவர்களது சகலவிதமான பொட்டுக்கட்டுக்களும் வெளியே வந்து சாயம் வெளுக்கும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சி சகல விடயங்களிலுமே இரட்டை வேடம் கொண்டுள்ளதாகவும், நம்பவைத்துக் கழுத்தறுக்கும் பணியில் இதன் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த ஆனந்த சங்கரி, பொதுநலவாய மாநாடு தொடர்பாகவும் தமிழ்க் கூட்டமைப்பு இருமுகங்களைக் கொண்டுள்ளதாகவும், கட்சிக்கு நேற்று வந்த அரசியல் பால்குடிகளை வைத்துக் கொண்டு அவர்களது கைப்பொம்மையாக மாறியுள்ள சம்பந்தன் பழையவர்களை ஒதுக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்