தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளராக இருந்த மோகன் அவர்கள் கடந்த சில தினங்களிலிருந்து கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் பெயரைப் பயன்படுத்தி ஏழைமக்களுக்கு காணிகள் வழங்குவதாக குறிப்பிட்டு அவர்களிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டு , அவர்களுக்கு உரிய ஆவணங்களை வழங்காது ஏமாற்றியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஏழைமக்கள் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தார்கள்.
குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பா கட்சி தலைமையினால் விசாரணை செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திலுள்ளும் அவரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை. அந்தவகையில் மோகன் அவர்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமையினால் கட்சியானது அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.
குறிப்பிட்ட விடயம் தொடாபாக கட்சியின் பிரதித்தலைவர் யோகவேள் அவர்களின் தலைமையிலான மூன்று பேர்கொண்ட குழுவானது விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விரைவில் அது தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ளது. விசாரணைகளின்போது குற்றம் நிரூபிக்கப்படுமாயின் மோகன் அவர்களை முழுiமாயக கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.