11/08/2013

| |

எந்தவொரு நாடும் உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பத தவறு

இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம்
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்
இலங்கையில் மாற்றமொன்று ஏற்படவேண்டுமென்பதில் நான் முன்னிலையில் இருக்கிறேன். எல்.ரி.ரி.ஈயின் பயங்கரவாத செயற்பாடுகள் முடிவடைந்தது குறித்து நாம் எவரும் கவலைப்படலாகாது. எல்.ரி.ரி.ஈக்கும் இலங்கை அரசாங்கப் படையினருக்கும் இடையிலான நீண்ட யுத்தத்தில் இறுதி நாட்களில் ஏற்பட்ட இரத்த களரி மற்றும் கொடூரமான நிகழ்வுகளின் காணொலியை பார்த்த அனுபவத்தை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. இத்தகைய, சூழ்நிலையில் இலங்கையை பகிஷ்கரிப்பது தவறான செயல் என்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பில் நடைபெறும் பொதுநல வாய உச்சிமாநாட்டை பகிஷ்கரிப்பது தவறு என்று நான் நினைக்கிறேன். இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதே சரியான செயலாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் அங்குள்ள நிலையை புரிந்து கொள்வதுடன் இந்த முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சந்தித்துப் பேசி அவர்களின் கூற்றில் உண்மை இருக்குமாயின் அது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் நாம் நேரடியாக பேச முடியுமென்றும் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.
1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அந்நாட்டின் வடபகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக டேவிட் கெமரூன் இருப்பாரென்று கூறிய அவர், இந்த முரண்பாட்டினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டினை நடத்துவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் அளித்ததனால் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரங்களை மிகவும் துல்லியமாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிற தென்று தெரிவித்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர், இதனால் இப்போது இலங்கையில் பல முன்னேற் றங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன என்று கூறினார்.
2009ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீள் நிர்மாணம் செய் வதற்கும் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகளை சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கும் ஆக்கப்பூர்வமான பாரிய பணிகளை புரிந்துள்ளது என்றும் வில்லியம் ஹேக் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதற்காக ஓர் ஆணைக்குழுவையும் நியமித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை வரவேற்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் இவற்றைவிட மேலும் பல நற்பணிகளை இலங்கை மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறது என்றார்.
இந்த உச்சிமாநாடு ஒரு நாட்டை மாத்திரம் மையமாகக் கொண்டு இடம்பெறவில்லை. இங்கு நாம் பலதரப்பட்ட விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளோம். சுருக்கமாக கூறுவதாயின் பொதுநலவாய நாட்டு எதிர்காலம் பற்றி இங்கு தீர்மானிக்க வேண்டுமென பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பை உலகில் பலம்வாய்ந்த சக்தியாக மாற்றுவதே எமது நோக்கம் என்று தெரிவித்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இந்நாடுகளில் ஜனநாயகத்தை ஊக்குவித்து மனித உரிமைகளை பாதுகாத்து வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தொடரின் கருப்பொருளாக இருக்குமென்றும் கூறினார். இந்த எண்ணத்தை நாம் அடைவதற்கு சகல அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். சகரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பு வலுப்பெற்றிருந்தால் தான் பிரிட்டனிலும் நாம் பல சவால்களை வென்றெடுக்க முடியுமென்று தெரிவித்த வில்லியம் ஹேக், இவ்வுச்சிமாநாட்டில் பெண்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்வதை யுத்த ஆயுதமாக பயன்படுத்துவதை இல்லாமல் செய்வதுடன் சுதந்திரமான நடுநிலையான வர்த்தகத்தை பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஊக்குவிப்பதும் அவசியம் என்றும் கூறினார். புத்தாயிரமாவது ஆண்டில் அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் சகல நாடுகளிலும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவ துடன் அந்நாடுகளின் இதயத்தில் சிறந்த ஆளுமைத்திறன் இருப்பது அவசியம் என்று கூறினார். இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வது பிரிட்டிஷ் மக்களின் சிறப்புரிமைகளுக்கு துரோகம் செய்யும் செயலல்ல என்று வலியுறுத்திய வில்லியம் ஹேக், நாம் இலங்கை அரசாங்கத்துடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் உரையாடவுள்ளோம் என்றும் கூறினார்.