தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதுடன், அவர் உரையாடும் சக்தியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக நெல்சன் மண்டேலா சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நெல்சன் மண்டேலா தனது 95ஆவது பிறந்தநாளின்போதும் வைத்தியசாலையிலேயே கழித்திருந்தார்.
இதன் பின்னர் நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி ஜோஹன்நெஸ்பேர்க்கிலுள்ள வீட்டுக்குச் சென்றதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்திருந்தன.
தற்போது இவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதுடன், இவரால் உரையாடுவதற்கு முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள நெல்சன் மண்டேலாவின் மனைவி, மண்டேலா தனது முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நெல்சன் மண்டேலாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்ற தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகோப் சூமா, மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.