மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா இன்று காலை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசர அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கணுகல கலந்து கொண்டமையுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரேம்குமார் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல கல்விமானும் கலை இலக்கியவாதியுமான முன்னாள் பேராசிரியர் சி.மௌனகுரு கலைச் செமம்மல் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் மு. அருளானந்தம், க. அழகப்போடி, பூ. ம. சொல்லத்துரை, ஜனாப் சர்குல் ஹமீட் அகமட் லெவ்வை, ச.அரியரெத்தினம்( வாகரைவாணன்), க. இளையதமம்பி ஆகியோரும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் தேசிய ரீதியில் இடம்பெற்ற இலக்கிய விழாவின்போது சிறந்த கலாசார நிலையமாக இரண்டாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு மாவட்ட கலாசார நிலையத்துக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விருதை மாவட்ட உத்தியோகத்தர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். இலக்கிய விழாவில் அதிகளவு பங்குபற்றல்களை செய்த மண்முனை வடக்கு பிரதேச செயலகம், வாகரை பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் சிறப்பான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் வாகரை கதிரொளி கலைக் கழகத்தின் வசந்தன் கூத்து இரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது.
மாவட்ட இலக்கிய விழாவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கும் இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.