11/13/2013

| |

வரலாற்றுணர்வில்லாமல் எதையும் சாதிக்கமுடியாது.

sritharan suku5



Photo


இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான பின் 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன் கீழ் மாகாண சபை அமைப்பதில் தான் எத்தனை சவால்கள்.

இலங்கையின் ஏனைய மாகாணசபைத் தேர்தல்கள் நடந்தாயிற்று. ஆனால் எந்த மாகாணத்தை பிரதானமாகக் கொண்டு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டதோ அதுதான் பிரச்சனை.

மக்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ வடக்கு-கிழக்கில் தேர்தல்களை நடத்தி அந்த சபையை இயங்கச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை இந்திய அரச மட்டத்தில் முன்வைத்தவர் தோழர் வரதராஜப் பெருமாள்.

ஜனநாயகமற்ற சூழலில் தேர்தலில் மக்கள் வாக்களிப்பது குறைவாக இருந்தாலும் தேர்தல்கள் பற்றிய தயக்கங்களிலிருந்து விடுபட்டு காலப்N;பாக்கில் மக்கள் பங்கு பற்றும் நிலை ஏற்படும்.

அதற்கு எந்த அவப்பெயர் வரினும் இந்த முன்னெடுப்பு அவசியம் என்று கூறப்பட்டது.

பலவிதமான நிந்தனைகள் ,இழிவுபடுத்தல்கள் ,அவதூறுகள் மத்தியில் எல்லாமே ஆரம்பமாகியது.

தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு -கிழக்கின் தலைநகரை எங்கே அமைப்பது என்ற சர்ச்சை எழுந்தது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் இன் விருப்பம் யாழில் அல்லது மட்டுவில் அமையட்டும் என்பது.அதுவும் நாம் விரும்பியவாறு திருமலையில் அமைக்க முடிந்தது.

மாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரத்தை மத்திய அரசு அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை.ஆனால் மாகாண சபை இந்திய அமைதிகாப்பு படையின் உதவியுடன் மாகாண காவல்துறைக்கு ஆட்களைத் திரட்டி பயிற்சி வழங்கியது.

அதற்கு பின்னர்தான் இலங்கை அரசு அதனை அங்கீகரிக்க முன்வந்தது. மாகாண சபைக்கான வெளி நாட்டு உதவிகள் கிடைப்பதில் கூட கொழுப்பு பல தடைகளைப் போட்டது. எனினும் அன்றைய சூழ்நிலையில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அதனை லாவகமாக கையாள முடிந்தது.

யாழ்ப்;பாணத்தின் கணித அறிவு மென்பொருள் உற்பத்தியை பெங்கள+ர் மாதிரியாக ஒரு மென்பொருள் நகரமாக்க தீhமானிக்கப்பட்டது. திருமலையை ஹரியானாவின் தலைநகர் சண்டிகரை ஒத்த ஒரு நவீன நகராக நிhமாணிக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டன. அதற்காக கட்டிடக்கலைஞர்கள் வந்திருந்தார்கள்.

பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை கரையோரமாக ஒரு பாதை நிர்மாணிப்பதற்கான தீர்மானம் இருந்தது. யுத்தம் ஆரம்பித்து 5 ஆண்டுகளே அனபடியால் பெருமளவு உள்ளக கட்டமைப்புக்கள அழிந்திருக்கவில்லை.தமிழ்போராட்ட அமைப்புக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு தீர்க்கதரிசனமாக செயற்பட்டிருந்தால் நாம் கடந்த கால்நூற்றாண்டுகால அழிவுகளைத் தடுத்திருக்கமுடியும் . முள்ளிவாய்க்கால் அவலமோ இவ்வளவு போராளிகள்- போராட்ட தலைவர்களின் இழப்போ நிகழ்ந்திருக்காது.

நாம் துரதிஸ்டவசமாக உண்மை பேசுவதுமில்லை. நிஜத்தை தரிசிக்க விரும்புவதும் இல்லை. அதிகாரப்பரவலாக்கலுக்கான போராட்டத்தையும் மாகாணசபை முன்னெடுத்தது. மாகாணசபை , இணக்கப்பாட்டு நிரல்களில் காணப்பட்ட விடயங்களைப் பகிர்வதில் தயக்கம் காட்டப்பட்டது. வெலிஓயா திட்டமிட்ட குடியேற்றத் திட்டம் விரிவாக முன்னெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் மாகாணசபையின் நிர்வாகத்திற்கும் இடையே இழுபறிகள் இருந்தன. சுமுகமாக இயங்குவதற்காக மத்திய அரசின் அரசாங்க அதிபருடன் மாகாண அரசின் இணைப்பாளர்கள் மாவட்ட மட்டத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

மாகாண அரசு, மாகாண அரசாங்கம், மாகாண சபை பற்றிய புரிதல்கள் அதனை இயக்கியவர்களுக்கு இருந்தது. ஆனால் அதைப்பற்றிய பிரக்ஞை இல்லாமலே தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் சொற்களைப் பிரயோகிக்கிறார்கள்.

வடக்கு- கிழக்கு மாகாணசபைக்கு எதிரான தாக்குதல் இருபக்கமும் இருந்து .அதை எதிர் கொள்வதில் அராஜகநிலை காணப்பட்டது. பிரதம செயலாளர் ,முதலமைச்சரின் செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஊழியர்கள் உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் வினைத்திறனுடன் செயற்படுபவர்களாக இருந்தார்கள்.

சாதாரண குடும்பங்களைச் சேர்ந்;தவர்களுக்கு பரவலாக வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. வவுனியாவில் விவசாயக் கல்லூரி நிறுவப்பட்டது. கிளிநொச்சியில் பொறியியல் கல்லூரி நிறுவும் திட்டம் இருந்தது.

ஒருதரப்பிலேனும் உபத்திரவம் குறைவாக இருந்திருந்தால் இன்று சிறந்ததொரு கட்டமைப்பு பரிணமித்திருக்கும். ஆனால் அந்த இடைவெளி இருதரப்பாலும் அனுமதிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கு மாகாணசபையைச் சிதைப்பதில் மூச்சாக நின்றார்கள்.

குறிப்பாக படுகொலைசெய்யப்பட்ட பாரதத்தின முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அதிகாரப்பரவலாக்கல் விடயத்தில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். அந்த அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை உருவாக்குவத்தில் பங்களித்த பலர் தமது 20வது 30 வது அவகைகளிலேயே கொல்லப்பட்டு விட்டார்கள்.

தோழர் பத்மநாபாவும் 12 தோழர்களும் சென்னையில் கொல்லப்பட்டார்கள். இன்று கால் நூற்றாண்டு கடந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் அங்கத்துவம் வகிக்கும் பலருக்கு இவை தெரியாத சங்கதிகள்.அவர்கள் தமது 30 ஆவது அகவைகளில் சவால்கள் நிறைந்த உயிராபத்துக்கள் மலிந்த காலத்தில் வரலாற்றை இயக்கியவர்கள் .

1990களின் முற்பகுதியில் இந்தியாவின் தேசிய அரசியலில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளை தொடர்வதற்கு உதவவில்லை. எமது நாட்டுநிலைமையும் அதற்கு இடமளிக்கவில்லை. யுத்த சூழ்நிலையில் இருதரப்பிற்குமே அது அக்கறைக்குரிய விடயமாகவும் இருக்கவில்லை. ஏன் அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை அழிப்பதற்காக அண்ணன் தம்பி; உறவு வேறு கொண்டாடினார்கள்.

அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான விசேடமான பயற்சிப்பட்டறையாகவும் குரல்கொடுக்கும் அரங்காகவும் காணப்பட்டது. நில அதிகாரம் ,சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் உட்பட மாகாணச அதிகாரங்கள்- இணக்கபாட்டு நிரலில் உள்ள அதிகாரங்களை மத்திக்கு இழுத்தெடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக குரல் கொடுக்கும் -செயற்படும் அரங்காகவும் இருந்தது.

முஸ்லீம் காங்கிரசின் இளம் தலைவர்களின் அரசியல் பிரவேச களமாகவும் அது இருந்தது
தெற்கில் நிலவிய பயங்கர சூழ்நிலையில் பலமுற்போக்கு ஜனநாயக சக்திகள் திருமலையைப் புகலிடமாகக் கொண்டிருந்தார்கள்.

யுத்த சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் விருப்பத்திற்கு மாறாக பாராளுமன்ற ,உள்ள+ராட்சி,மாகாண சபை தேர்தல்களில் பங்கு பற்றுவது பிரச்சனை என்றிருந்த காலத்தில,; இதனை இயக்கியவர்களும் அதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களும் முக்கியமானவர்கள்.

தவறுகள் நேரவில்லை என்றில்லை . மிகப்பாரிய தவறுகள் நேர்ந்தன. அவை சுயவிமர்சனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டன. அது தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும். ஆத்ம பரிசோதனை இடையறாது நிகழவேண்டும்.

எல்லாமே வரலாற்றின் இயக்கவியல். இதனை உணராவிட்டால் மீண்டும் மீண்டும் கடுமையான சவால்களை நாம் எதிர் நோக்கவேண்டியிருக்கும் .இடைவெளி விடாமல் கடந்து வந்த 20 வருடங்களுக்கு இயக்கப்பட்டிருந்தால் இன்று அதன் அதிகாரங்கள் ஒரு தெளிவான வடிவத்தை அடைந்திருக்கும் . எல்லாம் இயக்கப்படுவதில் தான் இருக்கிறது.

ஆனால் அதனை இயக்குவதற்கு அதிதீவிர தமிழ் தேசியவாதமும் அதன் ஜனநாயக விரோத -பாசிச உள்ளடக்கமுமே பிரதானமாக எதிராக இருந்தது. எனவே வடக்கு ,கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு இன்றைய சூழ்நிலைமைகளில் செயற்படுவதற்கான வசதி வாய்ப்புக்கள் வழங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கின்றன.

இலங்கையில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக உலகளாவிய கரிசனை ஜனநாயகம் பற்றி நாடுதழுவிய அளவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இவை ஆக்கபூர்வமாக நடைமுறைச்சாத்தியமாக்கப்படவேண்டும். மாகாண சபையின் அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு இணக்கமும், போராட்டமும் என்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவேண்டும்.
இராணுவமயமாக்கல், திட்டமிட்ட குடியேற்றங்களை அகல்வதற்கு காரிய சாத்தியமான முறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

மாகாணசபைக்குரிய அதிகாரங்களை உறுதிப்படுத்துவதிலும் புத்தி பூர்வமானதும், தீர்க்கதரிசனமானதுமான அணுகுமுறைகள் தேவை. சர்வதேச, பிராந்திய சத்திகளின் வரையறைகளும் ,பேரினவாத மேலாண்மையும் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தும் என்பது விளங்கவேண்டும்.

வழமையாக “போட்டுடைக்கும்” பண்பு கொண்ட தமிழ் தேசியத்தின் அதிதீவிர தன்மைகளும் புரிந்துகொள்ளப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கலுக்கான சத்திகளுடன் கரங்கோர்க்க வேண்டும்.

இலங்கையில் ஏற்படும் ஜனநாயக மாற்றமே இலங்கையின் சகல தேசிய இனசமூகங்களின் வாழ்விலும் ஜனநாயக மாற்றத்தை கொண்டு வரும் என்ற அடிப்படையான புரிதல் வேண்டும். எப்படி சிங்கள தேசியவாத மேலாண்மை அரசியலோ, அதேபோல் வடக்கு தமிழ் அரசியலால் மாத்திரம் எந்த உருப்படியான மாற்றமும் நிகழாது. அது பல சந்தர்ப்பங்களில் விபரீதங்களை நோக்கி இட்டுச் செல்லும் என்பதும் அனுபவமுமாகும்.