10/17/2013

| |

காங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தனை தரிசிக்க உதவும்

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் சமாதானமும் தங்களை தங்கள் பிரதிநிதிகள் மூலம் நிர்வகிப்பதற்கான மாகாணசபை ஒன்றை தெரிவு செய்த வாய்ப்பை பெற்றுள்ள வடமாகாணத்தில் வாழும் மக்கள் கதிர்காமத்து கந்தனை தரிசிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இருந்தே தென்னிலங்கையில் இருக்கும் கதிர்காமத் திற்கு ரயில் மூலம் பயணிப்பதற்கான வசதியை விரைவில் பெற இருக்கிறார்கள்.
இப்போது வடமாகாணத்திற்கான ரயில் சேவை கிளிநொச்சி வரையிலேயே நீடிக்கப்பட்டுள்ளது. வடபகுதிக்கான ரயில் பாதை கிளிநொச்சியில் இருந்து மிக வேகமாக அமைக்கப்பட்டு வருவதால் அடுத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு அளவில் இந்த ரயில் சேவை யாழ்ப்பாணம் வரை நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு மேலும் சில மாதங்களில் ரயில்சேவை நீடிக்கப்படும்.
1987ம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததனால் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் இந்திய அமைதி காக்கும் படையுடன் யுத்தத்தில் ஈடுபட்டதனால் வடபகுதிக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த யுத்த காலத்தில் தங்களின் பாதுகாப்பு அரண்களை நிர்மாணிப்பதற்காக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள், அரசாங்கம் பர்மாவில் இருந்து இறக்குமதி செய்த விலை உயர்ந்த ஸ்லிப்பர் கட்டைகளை கொள்ளையடித்தனர்.
ரயில் பாதைகளை கழற்றி எடுத்து, உருக்கி எல்.ரி.ரி.ஈ. அவற்றின் மூலமும் பாரிய ஆயுதங்களை தயாரித்தது. இவ்விதம் எல்.ரி.ரி.ஈ. வவுனியா வரையிலான ரயில்பாதையை முற்றாக சீர்குலைத்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் ரயில் பாதையை மீண்டும் வெளிநாடுகளின் உதவியுடன் மீள்நிர்மாணம் செய்தது. முதலில் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் பாதை கிளிநொச்சி வரை விஸ்தரிக்கப்பட்டது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வடபகுதி மக்கள் இரட்டை மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக சுமார் ஒன்றரை மாதகாலம் பயணித்த பின்னர் கதிர்காமத்தை சென்றடைந்தனர். யானைகள் உட்பட கரடி, சிறுத்தை போன்ற பயங்கரமான மிருகங்கள் இருந்த காடுகளின் ஊடாகவே மக்கள் இரட்டை மாட்டு வண்டிகளில் பயணித்தனர். ஒரு குழுவில் சுமார் 10 வண்டிகள் ஒன்றாக செல்லும். இது திருடர்களிடம் இருந்தும் காட்டு மிருகங்களிடம் இருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு செய்த யுக்தியாக கூறப்படுகிறது.
இவர்கள் அதிகாலை 4.00 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து முற்பகல் 10.00 மணியளவில் பயணத்தை பாரிய மரங்களின் நிழலில் இடை நிறுத்தி அன்றிரவை அங்கு தங்கியிருந்து உணவை சமைத்து உண்டு, தூங்கி எழுந்து மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பார்கள். இவ்விதம் தான் சுமார் 50 நாட்கள் பயணித்து கதிர்காமத்தை அடைந்து கதிர்காம கந்தனை தரிசிப்பார்கள். இப்போது அரசாங்கம் தென்னிலங்கையில் மாத்தறையில் முடிவடையும் ரயில் சேவையை பெலியத்தை வரை நீடிப்பதற்கான ரயில்பாதை நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வை இம்மாதம் 28ம் திகதியன்று பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்க இருக்கிறார்.
பெலியத்தை வரை நீடிக்கப்படும் ரயில்பாதை பின்னர் அம்பாந்தோட்டை வரையிலும், அதையடுத்து அம்பாந்தோட்டையில் இருந்து கதிர்காமம் வரையிலும் நீடிக்கப்படும். இந்த ரயில் பாதையின் நிர்மாணப்பணிகள் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுக்கு மென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் வடக்கில் காங்கேசன்துறையில் ரயிலில் பயணத்தை ஆரம்பிக்கும் ஒருவர் கதிர்காமத்தில் தனது ரயில் பயணத்தை முடித்துக் கொண்டு கதிர்காமக் கந்தனை தரிசித்து மீண்டும் காங்கேசன்துறைக்கு திரும்புவதற்கான வாய்ப்பை அரசாங்கம் இந்த ரயில்பாதை விஸ்தரிப்பின் மூலம் செய்து கொடுத்துள்ளது.
வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கும் ரயில்பாதையினால் இவ்விரு பிரதேசங்களுக்கிடையிலான வர்த்தகத் தொடர்புகள் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வடபகுதியில் இருந்து புகை யிலை, வெற்றிலை, கிழங்கு, வெங்காயம் போன்ற விளை பொருட் களும் மீன், கருவாடு போன்றவையும் லொறிகளின் மூலமே தென்னி லங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பெருமளவு போக்குவரத்து கட்டணம் ரயில் பாதை ஆரம்பிக்கப்பட்டவுடன் கணிசமான அளவு குறைந்துவிடும்.
அதுபோல், தென்னிலங்கையில் இருந்து துவிச்சக்கர வண்டிகள் உட்பட பலதரப்பட்ட இரும்பினாலான பொருட்களும், கணனி இயந்திரம் போன்றவற்றையும் ரயில்பாதை விஸ்தரிப்புக்கு பின்னர் ரயில் வண்டி களிலேயே வடபகுதிக்கு அனுப்புவதற்கான வசதிகள் செய்து கொடு க்கப்படும். உலகில் அதிவேக விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் ரயில் மூலம் பயணிப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்தியா வில் தான் முழு உலகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஆகக் கூடிய தூரத்திற்கு செல்லும் ரயில் சேவைகள் இருக்கின்றன.
இந்தியாவில் சுமார் 2000 மைல்களை கடந்து செல்வதற்கு ஒரு ரயில் வண்டிக்கு சுமார் மூன்று நாட்கள் கூட எடுப்பதுண்டு. இந்த ரயில்களில் படுக்கை வசதிகள், நீராடுவதற்கான ஸ்நான அறை வசதிகள் கூட செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பலநாட்கள் பயணிக்கும் பயணிகளுக்கு சுடச்சுட தோசை, இட்லி, சோறு போன்ற உணவுகள் ரயில் வண்டி யிலேயே பரிமாறப்படுகின்றன. இதுபோலவே ஐரோப்பாவிலும் பல நாடுகளின் ஊடாக செல்லும் ரயில் பாதைகள் இருக்கின்றன. மொஸ் கோவில் இருந்து இரு பக்கமும் பனி மூழ்கியிருக்கும் பாதையில் லெனின்கிராட் வரையில் செல்லும் பாதையே உலகிலுள்ள ரயில் பயணி களை பெரிதும் கவர்ந்திருக்கும் ரயில் பயணமாக அமைந்துள்ளது.