10/10/2013

| |

காலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளியீடு

நூல்களின் உரு வாக்கம், அவற் றின் பாவனையும் குறைந்திருக்கும் இக்காலப் பகுதியில், நூலுருவாக்க முயற்சி என்பது காலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது. அறிவுலகமும், அறிஞர் குழாமும் பெருமையுடன் அடையாளப்படுத்தும் சிறந்த எழுத்தாக்க முயற்சிகள் பாராட்டுக்குரியன. அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள "கல்வியியல் துறைசார் நூல் தொகுதி"யினை இவ்வகைக்குள் கொண்டு வரலாம்.
ஏனெனில், கல்விச் சமூகத் தையும், எழுத்துலகையும் சேர்ந்த ஏராளமான அறிஞர்கள் இவ் வெளியீடு குறித்துப் பாராட்டி கருத்துரைத்துள்ளனர். கல்விப் பணிப்பாளர்கள், பல்கலைக் கழகத் துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பத்திரி கையாசிரியர்கள், கல்லூரிகளின் முதல்வர், பாடசாலை அதிபர்கள் மற்றும் இந்நூல்களினால் நேரடியாகப் பயன்பெறும் மாணவர்களென்று எல்லோரும் சிறந்த முயற்சி என்று இதனை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இக்கல்வியியல் துறைசார் நூல் தொகுதியினை மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த செல்வி சுமதி மகேந்திரராசா எழுதி வெளியிட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி பிள்ளை நலத்துறை தற்காலிக கட்டுரையாசிரியராக இருக்கும் போது அவர் இதனை எழுதி வெளியிட்டுள்ளார்.
நூலாசிரியர் மட்டக்களப்பு பழுகாமம் கிராமத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே தேடும் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பக் கல்வியை மட்/பழுகா மம் விபுலானந்த வித்தியாலயத்திலும், இரண்டாம் நிலைக் கல்வியை மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திலும் கற்று கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கலைப் பிரிவிற்குத் தெரிவாகி, கல்வி பிள்ளை நலத்துறையில் கல்விமாணிப் பட்டமும் பெற்றவர்.
இந்நூல் தொகுதியில் கல்வியியல் துறைசார்ந்த மூன்று நூல்கள் உள்ளடங்கியுள்ளன.
1. கல்வியியல் கட்டுரைகள்,
2. சமூகமமாக்கல் - குடும்பம் மற்றும் பாடசாலையின் பங்கு,
3. சர்வதேச தினங்கள் - கல்வியியல் சிந்தனையின் புரிதலும் தேவையும்.
கல்வியியல் கட்டுரைகள் என்னும் நூலில், கல்வியியல் எண்ணக் கருக்களுடனும், கோட்பாடுகளுடனும் தொடர்புடைய பல அம்சங்கள் ஆதார பூர்வமான எடுத்துக்காட்டுகளுடன் ஆராயப்பட்டுள்ளன. தொடக்க காலச் சிந்தனையோடு, நவீன சிந்தனைகளும் அவை தொடர்பான வாதப் பிரதி வாதங்களும் இடம்பெற் றுள்ளன. இவற்றில் கல்வியியல் செயல்நிலை ஆய்வு, கல்விச் சீர்திருத்தத்தில் இயற்கைவாத, பயன்பாட்டுவாதக் கருத்துக் களின் பிரதிபலிப்பு, கற்றல் சூழலிலுள்ள வளப்பாவனையும், முகாமையும், மாணவர்களின் சமூகமயமாக்கலின் இன்றிய மையாமை, ஆசிரியரின் உள வியல் நடத்தையின் அவசியம், கற்றலுக்கான வீட்டுச் சூழல் மற்றும் அதனைப் பாதிக்கும் காரணிகள் என்று பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
சமூகமயமாக்கல் - குடும்பம் மற்றும் பாடசாலைகளின் பங்கு என்னும் நூலில், பிரதானமாக நான்கு அம்சங்கள் நான்கு பகுதிகளாக்கப்பட்டு ஆராயப் பட்டுள்ளன. முதலாவதாக சமூகமயமாக்கல், அது தொடர்பான எண்ணக்கரு விளக்கம், நோக்கங்கள், வளர்ச்சிக் கட்டங்கள், கோட்பாடுகள், முகவர்கள், இவைகளின் முக்கியத்துவம் போன்றனவும், இரண்டாவதாக குடும்பம் தொடர்பான விளக்கம், அவற்றின் பண்புகள், பணிகள், வளர்ச் சிக் கட்டங்கள், ஏற்படும் பிரச்சினை கள் தொடர்பாகவும், மூன்றாவதாக பாடசாலை தொடர்பான வரையறை, அங்குள்ள முகாமை, வளங்கள், தேவையான அணுகுமுறை தொடர்பிலும் நான்காவதாக மாணவர்கள் தொடர்பிலான பார்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், அதற்கான மாற்று யோசனைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன.
சர்வதேச தினங்கள் - கல்வியியல் சிந்தனையின் புரிதலும், தேவையும் என் னும் நூலில் முக்கியமான சர்வதேச தினங்களைத் தேர்ந்தெடுத்து கல்வியியல் சிந்தனைகளோடும் பொதுவான நடைமுறைக ளோடும் தொடர்புபடுத்தி ஆக்கங்கள் வெளியிடப் பட்டுள்ளன. சர்வதேச எழுத்தறிவு தினம், சிறுவர் தினம், இளைஞர் தினம், ஆசிரியர் தினம், விதவைகள் தினம், அகதிகள் தினம், தற்கொலைத் தடுப்பு தினம், சமாதான தினம், விழிப் புலனற்றோர் தினம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எழுத்தறிவின் பணி என்ன?, இலங்கைச் சிறுவர்கள் மீதான பார்வை, இளைஞர்களுக்கான சிந்தனை உருவாக்கம், முன்மாதிரியான ஆசிரியர்கள், விதவைகளின் மறு வாழ்வு, அகதிகளின் புனர்வாழ்வு, தற்கொலையின் எண்ணிக்கை அதிகரிப்பு, சர்வதேச சமாதானத்தின் தேவை, விழிப்புலனற்றோருக்கான கல்வி போன்ற அம்சங்களை நவீன சிந்த னைத் தளங்களை தொடர்புபடுத்தி கேள்விகளுடனும், ஆதாரங்களுட னும் பல்வேறு கருத்துகள் பரிமாறப் பட்டுள்ளன.
கல்வியியல் துறைசார்ந்த தமிழ் மொழி மூலமான நூல்கள் குறைவாக இருக்கின்ற இக்காலச் சூழலில் இம்மூன்று நூல்களின் வெளியீடும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதனை அவதானிக்க முடியும். உண்மையில் இம் மூன்று நூல்க ளும் ஆழமான வாசிப்புப் பின்புலத் துக்குப் பின்னாலும் நீண்ட நாள் தேடலுக்குப் பின்னாலும் மிக நேர்த் தியான ஒழுங்குபடுத்தலுக்குப் பின் னாலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள தனால் அதன் தரவும், அமைப்பும் கற் றோரை கவரும் விதத்திலும் அமைந் துள்ளன.
இதுபோன்று தொடக்க காலச் சிந்தனைகளை மட்டும் தொகுத்து எழுதாது நவீன கல்விச் சிந்தனைகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி எழுதியிருப்பது இன்னும் இந்நூலின் தகுதியை அதிகரித்திருக்கின்றது. மேலும் வெவ்வேறு அறிவியல் விவாதத் தளங்களான பெண் கல்வி, உளவியல் அணுகுமுறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்பு, அகதிகளுக்கான புனர்வாழ்வு, இளையோர் குறித்த எழுதுவினாக்கள் என்று எல்லாவற்றையும் கல்வியியல் சிந்தனையுடன் சுவையும், அறிவியல் கேள்விகளும் வெளிப்படும் வகையில் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியதாக உள்ளது.
இது போன்று இந்நூல் வெளி யீட்டினால் பொதுவான வாச கர்களுக்கு மேலதிகமாக, கல்வியி யல் துறைசார்ந்த பாடசாலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மேற்படிப்பு மற்றும் ஆய்வு வேலைகள் செய்யும் மாணவர்கள் நேரடியாக பயன் பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இளம் கல்வியியல் சமூகத்தைச் சார்ந்த ஒரு எழுத்தாளரின் முயற்சியை நாம் எப்போதும் பாராட்டுதல் பொருத்தமானதே. ஏனெனில், இந்த பாராட்டுக்கள் இன்னும் ஏராளமான புதிய வகை ஆய்வு நூல்கள் வெளியாக உறுதுணையாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக் கையுள்ளது. ஆகவே இவ்வகை நூல் தொகுதியை வெளியிடும் எழுத் தாளர்களுக்கு பக்கபலமாய் இருப்பது காலத்தின் தேவையாகும். இம்முயற் சியை தொடங்கி வைத்துள்ள நூல் தொகுதி ஆசிரியரை பாராட்டுவோம், வாழ்த்துவோம்.