10/22/2013

| |

ஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் என்பவர் நிகழ்கால பிரபாகரனே! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆநந்த சங்கரி குறிப்பிடுகிறார்.

வார இறுதிச் செய்திப் பத்திரிகையொன்றின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:

'தற்போது ஸ்ரீதரன்தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன். அந்த முட்டாளின் செய்தியை நான் கேட்கத் தயாராக இல்லை. ஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். அவரது இலக்குகளை அடைய அவர் இலகு வழிகளைத் தேடிவருகின்றார்'