10/10/2013

| |

தேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே? மட்டக்களப்பு த.தே.கூட்டமைப்பினர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது  யாழ்ப்பாண ஆதிக்க வாதத்தையே தொடர்ந்தும் கொண்டிருக்கின்றது என்பதுடன், தொடர்ந்தும் மட்டக்களப்பினை புறக்கணித்தே வருகின்றது என்பது இத்தடவை இடம்பெற்ற வடமாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாண நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மட்டக்களப்பு மக்களையும், மட்டக்களப்பிலுள்ள தமது கட்சியின் உறுப்பினர்களையும் தேவைக்கு பயன்படுத்தி விட்டு தேவை முடிந்த பின்பு தூக்கி வீசும் கருவேப்பிலைபோன்று பயன்படுத்p வருவதனை இந்த பதவியேற்புடனான நிகழ்வுகள் மீண்டும் ஒரு தடவை மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டடைப்பின் உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
வடமாகாண சபை தேர்தல் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செல்வராசா, யோகேஸ்வரன், அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்கள், விசாரணைகள் என்பவற்றுக்கும் மத்தியில் பிரசார நடவடிக்கைகளுக்காக கட்சியின் தலைமைத்துவத்தினால் வடக்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பலமேடைகளிலும் தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக வீரவசனங்களை இந்த அரசியல்வாதிகள் பேசியதுடன், தம்மை ஒரு விருந்தினர்களாகவே அழைப்பதாகவும் கருதி வந்தனர்.ஆனால் கடந்த 07.10.2013.அன்று ஜனாதிபதியின் முன்னிலையில் வடமாகான சபையின் முதலமைச்சர் பதவிக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றபோது கிழக்கைச் சேர்ந்த ஒருவரைத் தானும் அழைத்துச் செல்லாமையானது மட்டக்களப்பின் அரசியல்வாதிகளை தமது வேலையாட்களைப் போன்று உபயோகிப்பது புலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், சித்தார்த்தன்,வினாயகமூர்த்தி போன்ற வடக்கைச் சேர்ந்தவர்களே இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வாதிகளுக்கும் இதில் அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறுதான் தொடர்ந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பை புறம் தள்ளி வருகின்றது. மட்டக்களப்பு மக்களிடமிருந்து எவ்வளவு இலாபம் பெறமுடியுமோ அதனை பெறவேண்டும் ஆனால் அவர்களை அடிமைபோன்று நடாத்தவேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாகத் தென்படுகின்றது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் அவுஸ்ரேலியாவிற்கு சென்றிருந்தமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தேர்தல் நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காகவே ஆகும். வடக்கு தேர்தலுக்கு நிதி மற்றும் வேலைகளைச் செய்வதற்கு எமது மாவட்ட உறுப்பினர்கள் தேவை ஆனால் அதன் வெற்றியில் அல்லது முக்கியமான நிகழ்வில் வடக்கைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தேவை என்ற நிலைiயையே இந்தச் சம்பவும் எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து அரசாங்கம் கொடுக்கின்ற சம்பளத்தில் தம்மை கவனித்துக்கொண்டும், அரசிடமிருந்து வருகின்ற அபிவிருத்திகளை தடுத்து நிறுத்துவதற்குமே இங்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளனரே தவிர வேறொன்றுக்குமில்லை. கடந்த மாகாண சபை தேர்தலில் கூட கிழக்கை ஒரு முஸ்லிம் ஆண்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு தமிழன் மட்டும் ஆளக்கூடாது என்பதனை களநிலைமைகளை யதார்த்தமாக அறிந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இங்கு தனது வேலையாட்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை களமிறக்கியது. இவையெல்லாம் சாதாரணமாக ஒரு சிறுபிள்ளைக்குக்கூடத் தெரிந்த விடயம் ஆகும்.
தமிழ்த்தேசிக் கூட்டடைமப்பு வடக்கில் தான் ஆளவேண்டும் ஆனால் கிழக்கில் எப்படிபோனாலும் பரவாயில்லை. ஆனால் அங்கிருந்து எவ்வளவு இலாபம் ஈட்டமுடியுமோ அதை ஈட்டிக்கொள்வோம் என்பதற்காகவே, இங்கு தேர்தல்களில் தொடர்ந்தும் தமது உறுப்பினர்களை இங்கு வேலைக்கமர்த்தி வருகிறது. நாம் இட்ட வாக்குகள் அவர்களுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுக்கிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தொடர்ந்தும் மட்டக்ளப்பு தமது உறுப்பினர்களை வேலைகாரர்களாகவே பயன்படுத்தி வரும் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதனிடையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரதேசத் தலைவராக நியமிக்கும் போட்டியில் செல்வராசா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்தும் மோதி வருவதாகத் தெரிகின்றது. குறிப்பாக அண்மையில் ஆரையம்பதி மக்கள் மேற்கொண்ட ஆர்பப்பாட்டத்தின்போது  செல்வராசா தமிழர்களுக்கு ஆதரவாகவும், யோகேஸ்வரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பேசியமை இவர்களுக்கிடையேயுள்ள முரண்பாட்டின் தண்மையை மேலும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவிகளோ நிகழ்வகளுக்கோ அனுமதி வழங்காமல் வடக்குத் தலைமை உங்களை புறக்கணித்து வரும்போது நீங்கள் என்னடாவென்றால்; இங்கு எமது வோட்டைப் பெற்றுக்கொண்டு உங்களுக்குள் இங்கு சண்டை பிடித்து வருகிறீர்கள்.
எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளன் என்ற வகையில் நான் குறிப்பிடுவது என்வெனில், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த அனைவரும் அக்கட்சியிலிருந்து எமக்கு மரியாதை இல்லலையெனில் தொடர்ந்தும் வாலாட்டிக்கொண்டிராமல் தனித்துவமாக ஒரு கட்சியை நாம் உருவாக்குவதற்கு முன்வரவேண்டும். இல்லாவிட்டால் உங்களை எச்சில் தூக்கும் வேலைக்காரர்களாகத்தான் தொடர்ந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை நடாத்தும் என்பது மட்டும் உறுதி. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் எச்சில் தூக்குவீhகள் நாங்கள் மட்டும் உங்கள் பின்னால் நிற்கமாட்டோம். ஏனெனில் மடையனுடன் சேர்பவனும் மடையன்தானே.......
-ச.யோகேசுவரன் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் , மட்டக்களப்பு -