10/10/2013

| |

கனடாவின் முடிவு தவறானது

* பொதுநலவாய மாநாட்டு பகிஷ்கரிப்பு கனடாவை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும்
* ஏனைய நாடுகளின் ஆதரவுள்ளதால் கோலாகல ஏற்பாடு
*  உள்நாட்டு அரசியலை சர்வதேசத்துடன் இணைப்பது தவறு
* இறைமையுள்ள நாடுகளின் கூட்டத்தை அரசியல் களமாக்க முடியாது
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் தவறானதென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கனடாவின் இந்த தீர்மானம், சர்வதேச நாடுகளிலிருந்து அதனை தனிமைப்படுத்தியுள்ளதே தவிர பொதுநலவாய மாநாட்டிற்கு எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தப் போவதில்லை யெனவும் அமைச்சர் நேற்று திட்டவட்டமாக கூறினார்.
உள்நாட்டு அரசியலை சர்வதேச மாநாடொ ன்றுடன் இணைப்பதென்பது பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. கனேடிய அரசாங்கம் இறைமை மிக்க நாடுகளின் ஒன்றுகூடலான பொதுநலவாய மாநாட்டை அரசியல் களமாக மாற்ற முனைவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அமைச்சர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கையி லேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, கனேடிய அரசியல்வாதிக ளெடுக்கும் ஒருசில திடீர் தீர்மானங்களினால் பொதுநலவாய அமைப்பின் வரவு - செலவு திட்டமோ அல்லது இலங்கையின் பொரு ளாதாரமோ எந்த வகையிலும் பாதிப்படையப் போவதில்லை எனவும் பொதுநலவாய வர்த்தகப் பேரவையின் தலைவர் டாக்டர் மொஹான் கவுல் நேற்று ஆணித்தரமாக கூறினார்.
பொதுநலவாயத்திற்கான சந்தாப் பணத் தினை கனடா குறைக்கவிருப்பதாக அறிவித் துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட வினாவிற்கே இவர் மேற்கண்டவாறு பதிலளித்ததுடன், அமைப்பின் எதிர்வரும் 05 வருட காலத்திற்கான நிதி ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப் பட்டிருப்பதனால், அரசியல்வாதிகளின் செயற் பாடுகள் அதனைப் பாதிக்காது என்றும் கூறி னார்.
பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைமைத்துவத்தை கொண்டிருக்கும் அவுஸ் திரேலிய அரசாங்கமே கனடாவின் பகிஷ்கரிப் பினை ஏற்க மறுத்துள்ளதெனவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் அண்மை யில் நடந்த மாநாடொன்றில் அவுஸ்திரேலிய பிரதமர் ட்ரொனி அபொட் கனேடியப் பிரதமரிடம் நேரடியாகவே தமது மறுப்பினை தெரிவித்துக் கொண்டுள்ளதுடன் பழைய நண்பர்களை கைவிட்டு விட்டு புதிய நண்பர் களை தேடும் முயற்சி பலனளிக்காது என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.
அந்த வகையில் அவுஸ்திரேலியா எமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பும் ஆதரவும் பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பக்கபலமாக அமைந்துள்ளதெனவும் அவர் கூறினார். சிங்கப்பூர், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, பங்களாதேஷ், ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் உகண்டா, தன்சானியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, சீஷெல்ஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக என்னிடம் நேரடியாகவே விருப்பம் தெரிவித்துள் ளனர்.
இந்நிலையில் பொதுநலவாய அமைப்பில் கனடா தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் எமக்கு முழுமையான ஆதரவினையும் ஆசிர்வாதத்தையும் வழங்கியுள்ள நிலையில் சர்வதேசத்திலிருந்து கனடா தனிமைப்படுத்தப்படுகிறது.
பொதுநலவாய மாநாடென்பது அதன் உறுப்புரிமை நாடுகள் தமது பாரம்பரியம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும். இதில் தீர்ப்பு வழங்குவதற்கோ உள்ளூர் அரசியலை இணைத்துப் பார்ப்பதற்கோ வழிமுறைகள் இல்லை. இதனை கனேடிய அரசாங்கம் கொச்சைப்படுத்த நினைப்பது முற்றிலும் தவறு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் ஐ. நா. பொதுக் கூட்டத்தில் பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுட னான சந்திப்பில் அனைவரும் 2013 மாநாட்டின் தொனிப் பொருளை வெகுவாக பாரட்டியதுடன் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆச்சரியமடைந்தனர். கனேடிய அரசாங்கம் இதனை பகிஷ்கரிப்பினும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டினை வெகு கோலாகலமாக நடத்த முடியுமென்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு உண்டெனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெறவுள்ள வர்த்தகப் பேரவைக்கு கனடா தவிர்ந்த 64 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இங்கிலாந்திலிருந்தே பெரும் எண்ணிக்கையான பிரதிநிதிகள் இப்பேரவைக்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் கவுல் கூறினார்.