10/04/2013

| |

முன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்டையில் பாலர் பாடசாலை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் நிதி செலவில் புணரமைக்கப்பட்ட பாலர் பாடசாலை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்டீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் குறித்த பாலர் பாடசாலையானது மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நடராஜா, கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர், ஆலயபரிபாலன சபையினர், வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.