வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற தேசியமட்ட கணித நாடகப் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்றிருந்தனர். ஒரு கிராமத்திலிருந்து பங்குபற்றி எமது கிராமத்திற்கு பெருமையீட்டியமைக்காக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், வழிநடாத்திய அதிபர் அவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக நின்ற ஏணையோருக்கும் எமது பாராட்டுக்களையும் எமது இணையத்தளம் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாணவர்களின் இந்தச் சாதனை முயற்சியானது அதிபர் மற்றும் கணித பாட குழு, மற்றும் பிற பாட ஆசிரியர்கள் மற்றும் பலரது கூட்டுமுயற்சியினால் கிடைத்ததொன்றாகும்.
அந்தவகையில் ஆலோசனைகளையும், ஊக்கப்படுத்தல்களையும் வழங்கிய பாடசாலை அதிபர் தினகரன் ரவி அவர்களும், நாடகத்தின் கதாசிரியரும் உதவி நெறிப்படுத்துனருமான திருமதி கலாயினி தயாபரன் (கணித பாட ஆசிரியர்) , நாடகத்தின் நெறிப்படுத்துனரான ஆறுமுகம் சிறிதரன் (நாடகமும் அரங்கியலும் ஆசிரியர்), நாடகத்தின் பிரதான ஒழுங்கமைப்பாளர்களான கு.தவராசா (கணித பாட இணைப்பாளர்) , க.தேவராசா (கணிதபாட ஆசிரியர்), தே.லிங்கேஸ்வரன் (கணித பாட ஆசிரியர்) முதலியோரும், நாடக உதவியாளர்களான செல்வி ம.சர்மினி (கர்நாடக சங்கீத பாட ஆசிரியர்), செல்வி பா.ஜெயராணி (நாடகமும் அரரங்கியலும் பாட ஆசிரியர்), செல்வி க.சௌந்தரி (பரத நாட்டிய பாட ஆசிரியர்), தாளவாத்திய உதவி புரிந்த தெ.டினேஸ்வரன், தங்குமிட உதவி புரிந்த கல்குடா கல்வி வலய கணித பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பொ.குகதாசன் , மாணவர் நலன்புரி நடவடிக்கையில் உதவிய ஆசிரியர் பு.தயாபரன் முதலியோரும், பாடசாலையின் பல்வேறு பாடத்துறை சார்ந்த பல ஆசிரியர்களும், பாடசாலையின் மாணவர்களும் இந்த சாதனை முயற்சியில் தம்மை அர்ப்பணித்திருந்தனர்.
கணித நாடகப் போட்டியில் பங்குபற்றி சாதனையை பெற்றுத் தந்த மாணவர்கள்
செல்வி. சிவகுமார் இந்துஜா
செல்வி. செல்வநாயகம் தூபிகா
செல்வி. சிவகுமார் குலோச்சனா
செல்வி. மனோகரன் சோஜிதா
செல்வி. மோகனதாஸ் டயனிக்கா
செல்வி. அழகேந்திரன் பவதாரணி
செல்வி. சுந்தரமூர்த்தி சுதர்ஜினி
செல்வி. சகாதேவன் இந்துஜா
செல்வி. சுதாகர் சன்சில்கா
செல்வன். குமார் கவிதர்சன்
செல்வன். சண்முகநாதன் சுரணிதரன்
செல்வன். இராமச்சந்திரன் டிலக்சன்
செல்வன். சத்தியசீலன் பேசாந்
செல்வன். அருமத்துரை குகலக்க்ஷன்
செல்வன். குழந்தைவடிவேல் டிலக்சன்
செல்வி. சண்முகநாதன் கேதுஜா
செல்வி. ரவிச்சந்திரன் விதுர்ஷனா
செல்வி. கோபாலன் ஜதுஷிக்கா
செல்வி. குமாரசாமி வக்சலா
செல்வி. சிறி கௌசல்யா
செல்வி. ரவிநாதன் லக்க்ஷனா
செல்வி. ஆசைத்தம்பி ஜெனனி