10/01/2013
| |
சங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பதவி விலகுவேன் சூளுரைக்கிண்றார் சிறிதரன்!
சங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பதவி விலகுவேன் சூளுரைக்கிண்றார் சிறிதரன்!
நடைபெற்று முடிந்த வட மாகாண சபை தேர்தலில் அதிகூடிய உறுப்பினர்களுடன் வட மாகாண சபையை கைப்பற்றியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வழமையான குத்துவெட்டுக்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கிண்றது.
தேர்தல் காலங்களில் கிளிநொச்சியில் வீடுவீடாக செண்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காவிட்டாலும் பறவாயில்லை ஆனால் ஆனந்தசங்கரிக்கு வாக்களிக்க வேண்டாமென பிரச்சாரம் செய்து வந்த பாராளுமண்ற உறுப்பினர் சிறிதர்ன் தற்போது மீண்டுமொரு போர்க்கொடியினை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தூக்கியிருக்கிண்றார்.
அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றப்பட முடியாத தேர்தல் வின்ஞாபனத்தினை நம்பி ஏமார்ந்த வடமாகாண மக்கள் அளித்த அளப்பெரிய வாக்குகளின் மூலம் மாகாண சபையினை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகார வெறியோடு அலையும் நேற்று முளைத்த அரசியல் வாதிகளின் கைகளில் சிக்குண்டு தவிக்கும் பரிதாப நிலைக்கு தள் ளப்பட்டுள்ளதானது வடமாகான மக்களின் அபிலாஸைகளுக்கு ஆப்பு வைப்பதாக அமைகிண்றது
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமண்ற தேர்தலில் பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை உற்று நோக்கும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார் ஆனால் அதனை விட கிட்டத்தட்ட்ட மூண்று மடங்கு விருப்பு வாக்குகளை திருமதி. அனந்தி சசிதரனும் அடுத்தாற்போல் திரு.சித்தார்த்தனும் பெற்றிருக்கும் நிலையிலும் தனது இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் எண்ற சிந்தனையுடன் மட்டுமே அரசியல் வியாபாரம் நடாத்தும் சிறிதர்ன் அனந்தசங்கரிக்கு போணஸ் ஆசனமோ அல்லது சித்தார்த்தனுக்கு அமைச்சு பதவியோ வழங்கப்படுமானால் தான் பாராளுமண்ற உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யப்போவதாகவும் ஒரு கதையை கிழப்பிடிட்டிருக்கிண்றார்.
நேற்றுப்பெய்த மழைக்கு இண்று முளைத்த காளானுக்குக்கூட ஒப்பிடப்படமுடியாத சிறிதரன் தலைவரின் மகனுக்கு வகுப்பெடுத்திருந்தாலும் எல்லோருக்கும் வகுப்பெடுக்க முடியாது என்பதனை அடுத்த பாராளுமண்ற தேர்தலில் புரிந்துகொள்வார்
எஸ்.எஸ்.கணேந்திரன்