10/15/2013

| |

இதையும் சர்வதேசம் பார்த்துகொண்டேயிருக்கிறது

ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டவர்கள் கேவலம் சத்தியபிரமாணத்தை கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை இவர்களை நம்பி வாக்களித்த வடமாகாண மக்கள் பாவம்.

*வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடந்த வாரம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.




*
வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் கொழும்பில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்





*
சிவாஜிலிங்கம்
 முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் டாக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்- 



*புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.