10/12/2013

| |

திவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்

வாழ்வின் எழுச்சிமூலம் நாட்டைக்கட்டியெழுப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட திவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
கோ.பற்று கிராம சேவையாளர் 12 பிரிவுகளிலும் திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் நிகழ்வுகள் இன்று காலை  சுபநேரத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
குடும்ப பொருளாதார மற்றும் போசாக்கினை உயர்த்துவதுடன் மனைப்பொருளாதாரத்தினை வலுவூட்டும் விவசாய வேலைத்திட்டம் என்ற தலைப்பில் இம்முறை ஐந்தாவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோ.பற்று பிரதேச செயலகத்தின் திவிநெகும ஐந்தாவது கட்ட பணிகள் மிகவும் பின்தங்கிய பகுதியான கல்குடா  பட்டியடிச்சேனையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கல்குடா சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில்  பட்டியடிச்சேனையில்  உள்ள சிறினேச மனோரஞ்சம் அவர்களின்வீட்டில் திவிநெகும ஐந்தாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கோபிநாத் (பொலிஸ் கொஸ்தாபல்) மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் மனகசபா விமலநாதன் கலந்துகொண்டனர்.
கோ. பற்றில் உள்ள 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் தலா அறுபது பேர் தெரிவுசெய்யப்பட்டு திவிநெகும ஐந்தாம் கட்டத்தின் மூலம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.