புகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை பிரான்சில் இடம்பெறவுள்ளது.புகலிட தமிழர்களிடையே உருவாகி வளர்ந்த கருத்து சுதந்திரத்திற்கான முக்கிய நிகழ்வுகளில் இந்த பெண்கள் சந்திப்பும் ஒன்றாகும்.பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த சந்திப்பு தனது அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் தொடங்கி சமூகம் சார்ந்து பெண்கள் மீது இழைக்கப்படுகின்ற அடக்குமுறைகள் பற்றிய பலவிதமான விடயங்கள் சார்ந்து உரையாடல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.காலத்துக்கு காலம் ஐரோப்பாவின் பலபகுதிகளிலும் இடம்பெற்று வரும் இச்சந்திப்பு பிரான்சில் இம்முறையோடு நான்காவது தடவையாக நடத்த படுகின்றது.வழமைபோல பலநாடுகளில் இருந்தும் இம்முறையும்.இலக்கியவாதிகளும்,பெண்ணியசெயல் பாட்டாளர்களும்,எழுத்தாளர்களுமானபலபெண்தோழிகள்பாரிசில் கூடுகின்றார்கள்.நிகழ்வுகளை விஜி ,வனஜா,தர்மினி,சீலா போன்றோர் முன்னின்று நடத்துகின்றனர்.2000ம் ஆண்டு முதல் தடவையாக பிரான்சில் 19வது சந்திப்பு நடந்தபோது எழுத்தாளர் சிவகாமி கலந்து கொண்டிருந்தார்.அப்போது அவர் தமிழ் பேசும் நல்லுலகில் இது போன்று பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு சந்திப்பு இதுவரை காண கிடைக்காதது என பாராட்டினர். அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இம்முறையும் நிகழும் 30வது சந்திப்பும் திறம்பட வெற்றியடைய வாழ்த்துவோம்.