திருமதி தேவராசா புனிதாரணியின் வயது 47. இவர் மூன்று பெண் பிள் ளைகளின் தயாராவார். பூநகரி பிரதேசத் தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமமான நோதார்முனி என்ற இடத்தைச் சேர்ந்த வர். இந்தப் பெண்ணின் முதல் கணவன், மனைவியையும் பிள்ளைகளையும் கைவிட்டு இரண்டாம் தடவை இன்னு மொரு பெண்ணை மணம் முடித்தான். இந்தப் பெண்ணின் இரண்டாவது கணவன் ஏதோ ஒரு குற்றம் செய்ததனால் சிறைவாசம் பெற்றுள்ளான்.
இப்போது இந்தக் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இந்தப் பெண் மீது விழுந்துள்ளது. இத்தகைய பின் னணியில் இவர் பனைமர இலைகளில் இருந்து கம்பளங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு கம்பளத்திற்கும் 250ரூபாவை வருமானமாக சம்பாதிக்கிறார். தற்போது இந்தப் பெண் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டிருக் கிறார். இந்தப் பெண்ணைப் பார்க்கும் எவரும் உண்மையிலேயே வேதனைப்படு வார்கள்.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியன்று வழமைபோல் இந்தப் பெண் பனைமர இலைகளை எடுப்பதற்காக தன்னுடைய சிறிய கூடாராத்திற்கு பின்னால் உள்ள பனந்தோப்புக்கு சென்றாள். அன்றைய தினம் அப்பெண் இரண்டு இனம் தெரியாத மனிதர்களால் மனிதாபிமானமற்ற முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று இந்தப் பெண் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
இந்தப் பெண் பின்னர் பூநகரியில் இருந்து கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மேலதிக சிகிச்சைக்காக இராணுவத்தினரால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பெண் மீது மூன்று சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்தப் பெண் ஈவிரக்கமற்ற காமுகர்களினால் ஏற்பட்ட காயங்களுக்காக சுமார் இரண்டு வாரங்கள் வைத்திய சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இருந்து பூநகரியில் உள்ள பொலிஸ் நிலையம் விசாரணைகளை நடத்தியது. ஆயினும் சில அரசியல்வாதிகள் சுயநல நோக்கத்துடன் இந்தப் பெண் மீதான பாலியல் குற்றச் செயலை இராணுவ வீரர்களே மேற்கொண்டார்கள் என்று ஆதாரமின்றி குற்றம் சாட்டினார்கள்.
பச்சை நிற சேர்ட் அணிந்த இரண்டு நபர்களினால் இந்த அப்பாவிப் பெண் மானபங்கப்படுத்தப்பட்டார் என்று கிடைத்த தகவலை அடுத்தே இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஊடகங்களில் இதனை பிரசாரம் செய்தார்.
இந்தக் குற்றச்சாட்டை இவர் அரசியல் மேடைகளிலும் சுமத்தினார். பின்னர் வட மாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரதம வேட்பாளராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரனும் இராணுவத்திற்கு எதிரான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்த ஆரம்பித்தார்.
ஆகஸ்ட் 22ம் திகதியன்று விக்னேஸ்வரன் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவின் அதிகாரியான செல்வி மாவென்ஸ் போஸ்டலுடனும் இன்னுமொரு அதிகாரியுடனும் நடத்திய இரகசிய சந்திப்பின் போது இதுபற்றிய குற்றச் சாட்டை எடுத்துரைத்து இந்தக் குற்றத்தை இராணுவ சிப்பாய்களே செய்ததாக கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
எவ்வாறாயினும் இந்தக் குற்றச் செயல் சம்பந்தமான விசாரணையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருமதி தேவராசா புனிதாரணி, கடந்த 30ம் திகதியன்று கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.
அதையடுத்து அவர் குற்றமிழைத்தவர்க ளின் அடையாளத்தை வெளிப்படுத்தி யுள்ளார். இந்தக் குற்றச் செயல் பற்றி தனது அண்ணன் மற்றும் ஏனைய உத்தியோகத்தர் முன்னால் தெரியப்படுத்தி யுள்ளார். கந்தசாமி தாரணிகரன் என்ற நோதார்முனியைச் சேர்ந்த ஒரு மனிதரும் 25 வயது மதிக்கத்தக்க தனக்கு தெரியாத இன்னொருவரும் தன்மீதான இந்தக் குற்றத்தை செய்ததாக கூறியிருக்கிறார்.
ஏன் இந்த தகவல்களை முன்னர் வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, அவர் விளக்கமளிக்கையில், தான் பதற்ற மடைந்து மன வேதனையில் இருந்ததனால் தனக்கு என்ன ஏற்பட்டது என்பதையே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த விபரங்களை வெளியிடவில்லை என்று கூறினார்.
இதையடுத்து இவர், கந்தசாமி தாரணிகரன் ஒரு கடற்தொழிலாளி என்றும் அவரது இரண்டு பிள்ளைகள் எல்.ரி.ரி.ஈ.யில் சேர்ந்து யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த மனிதன் எல்.ரி.ரி.ஈ.யின் பிராந்திய அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதன் பலவந்தமாக இளைஞர்களை எல்.ரி.ரி.ஈ. போராளிகளாக சேர்ப்பதில் முக்கிய பங்காற்றினார்கள் என்றும் அந்தப் பெண் கூறினார். இப்போது கூட பூநகரியில் எல்.ரி.ரி.ஈ. அதிகாரத்தில் இருந்த போது இவரால் துன்புறுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்தப் பெண் கூறினார். கந்தசாமி தாரணிகரன் என்ற மனிதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாலும், அவனது அதிகாரப் போக்கு காரணமாகவும் இந்த கிராமத்து மக்கள் வெறுக்கிறார்கள் என்றும் அந்தப் பெண் கூறினார்.
இந்த சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்களையும் பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது, இவர்கள் இந்தப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றத்தை இராணுவத் தரப்பினர்கள் மீது சுமத்தி, அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சி தெட்டத்தெளிவாக தெரிகிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் இதில் சம்பந்தப்பட்டி ருப்பது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன், இவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதும், அவர்களின் உள்நோக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
இத்தகைய பின்னணியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பூநகரியில் தற்போது ஆதரவை இழந்துள்ளது. அதனால் அவர்கள் பொதுமக்களை இலங்கை இராணுவ வீரர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் எண்ணத்துடனும் கிராம மக்கள் அவர்களுடன் நல்லுறவை வைப்பதை தடுப்பதற்கும் எடுத்த முயற்சியாக இது கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த விபரங்கள் விரைவில் வெளிவரும் போது, குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விசாரணை முடிவில் குற்றமிழைத்தவர் களுக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு ஊர்ஜிதம் செய்யப்படுவதுடன், இலங்கை இராணுவத்தினருக்கும் அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு எடுத்த விபரங்களும் வெளிவரும். இந்த சம்பவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிளளையின் வருகைக்கு முன்னர் இடம்பெற்றதனால், இந்த சம்பவத்தின் மூலம் இராணுவ துருப்புகள் மீது அபாண்ட பழி சுமத்துவதற்கும் இந்த முயற்சி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.