9/22/2013

| |

விழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுகிறது

இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும் ( மொத்தமாக இதுவரை 14 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5 இடங்களை இதுவரை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.
யாழ் மாவட்டத்துக்கான  அனைத்து தொகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெற்றிருக்கிறது.
ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.
விபரம்:
யாழ்ப்பாணம்:
தமிழ் அரசுக் கட்சி --- 14
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 02

மன்னார் :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 01
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 01
கிளிநொச்சி :
தமிழ் அரசுக் கட்சி --- 03
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 01
முல்லைத்தீவு :
தமிழ் அரசுக் கட்சி --- 04
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 01
வவுனியா :
தமிழ் அரசுக் கட்சி -- 04
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 02