9/05/2013

| |

படகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு, மண்முனையில் சம்பவம்

மண்­முனை ஓடத்­து­றையில் சேவை­யாற்­றிய இயந்­திரப் படகு விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பய­ணித்த பய­ணிகள் பலர் மயி­ரி­ழையில் உயிர் தப்­பி­ யுள்­ளனர்.
இந்தச் சம்­பவம்   திங்­கட்­கி­ழமை காலை 6.30 மணி­ய­ளவில் இடம்­ பெற்­றுள்­ளது.
எழு­வான்­கரைப் பகு­தி­யி­லி­ருந்து படு­வான்­கரை நோக்கிப் புறப்­பட்ட படகின் சங்­கிலி திடீர் என அறுந்­துள்­ள­தனால் பய­ணிகள் பலர் வாவியில் வீழ்ந்­துள்­ளனர்.
மண்­முனை ஓடத்­து­றையில் சேவை­யாற்­றிய இரண்டு இயந்­திரப் பட­கு­க ளில் ஒரு படகு ஏற்­க­னவே பழு­த­டைந்­துள்­ளது.
இந்த நிலையில் இரண்­டா­வது படகும் விபத்­துக்­குள்­ளா­னதை அடுத்து இந்தத்து றையில் இயந்­திரப் பட­குச்­சேவை முற்­றாக ஸ்தம்­பித்­துள் ­ளன.
இது விட­ய­மாக மட்­டக்­க­ள ப்பு வீதி அபி­வி­ருத்தி திணை க்­கள பிர­தம பொறி­யி­ய­லாளர் எஸ்.மகிந்­த­னுடன் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது அவர் கூறி­ய­தா­வது,
ஏற்­க­னவே பழு­த­டைந்­தி­ருந்த பட­கினை உட­ன­டி­யாக திருத்­தி­ய­மைத்து படகுச் சேவையை ஆரம்­பிக்­கு­மாறு அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இதேவேளை பயணிகள் அம்பிளாந்துறை வழியாக பய ணிப்பதற்கு ஏதுவாக அந்த ஓடத்துறையில் சேவை அதிக ரிக்கப்பட்டுள்ளது.