9/19/2013

| |

வன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இராணுவத்தால் விடுதலை செய்யப்பட்டார்.


2004ம் ஆண்டு மார்ச் 4ம் திகதி புலிகளுக்குள் உருவான கிழக்கு பிளவினை சமாதானமாக தீர்த்துவைக்கும் முகமாக சமாதான தூது சென்றவர் பதுமன்.அவ்வேளை திருமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த பதுமன்கிழக்கிலிருந்து வன்னிக்கு சமாதான தூது சென்றார்.அனைத்து வித யுத்த அறங்களுக்கும் மாறாக தூதுவனை கைது செய்து பாதாள சிறையில் அடைத்தனர் வன்னி புலிகள்.கிழக்கு பிளவை ஜனநாயக வழிகளில் தீர்க்கும் முயற்சியில்  தனது உயிரை பயணம் வைத்து வன்னிசென்ற பதுமனை  காணாத கிழக்கு மக்கள் "பதுமன் எங்கே? என்ற கேள்விகளோடு மெளனித்து கொண்டனர்.எப்படியோ இறுதி யுத்தம் வரை புலிகளின் பாதாள சிறையினில் உயிரை கையில் பிடித்துகொண்டு கிடந்த பதுமன் இறுதி யுத்த வேளையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.அதன்பின்னர் தனது கடந்த கால பயங்கர வாத செயல் பாடுகளுக்காக நீதியை எதிர் கொண்டு இன்று விடுதலையாகி உள்ளார்.


தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் திருகோணமலை தலைவர்  பதுமன் என்று அழைக்கப்படும்; சிவசுப்ரமணியம் வரதநாதன் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ முகாம்களை தாக்கியமை, இராணுவத்தினரை தாக்கி கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ராஜ் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க பாலம்பட்டார் பகுதி தலைவராக இருந்த காலத்தில் தாக்குதல்களை நடத்தினார் எனவும் கொலைகள் செய்தார் எனவும் இவர் மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.
குற்றம் சுமத்தப்பட்டடிவரின் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே அவருக்கு எதிராக வைக்கப்பட்ட சான்றாக இருந்தது. இதிலும் பல குறைகள் உள்ளதை கருத்திற்கு கொண்டு நீதிமன்றம் விடுதலை இவரை விடுதலை செய்துள்ளது.  பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.