சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பள்ளி பருவ பிள்ளைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை பல்வேறு இடங்களிலும் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த 04.09.2013 அன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாகரைபிரதேச செயலாளர் செல்வி எஸ்.இராகுலநாயகி, மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.முரளிதரன் மற்றும் அதிகாரிகள், பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.