கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன் இந்திய ஊடகத்திற்கு பேட்டி
வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களே உங்கள் வயதிற்கும், உங்கள் அனுபவத்திற்க்குமே நாங்கள் மரியாதை செலுத்துகின்றோம்.
தமிழக உறவுகள் எப்போதும் ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி உறவுகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களவர்கள் உங்கள் குடும்பத்திற்கு கணவன், மனைவி உறவாக இருக்கலாம் அது தப்பில்லை ஆனால் இந்த சிங்களவர்களின் கணவன், மனைவி உறவு உங்கள் குடும்பத்துடன் மட்டுமே தவிர ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுடன் அல்ல…
ஏற்கனவே நீங்கள் முன்பு ஒரு முறை தமிழீழ தேசிய தலைவரை பயங்கரவாதி என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இன்றும் ஆறாத வடுவாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஐயா.
சிங்கள, இந்திய ஊடகங்களுக்கு ஒரு கருத்தும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கருத்தும் எப்போதும் தெரிவித்து கொண்டே இருக்கிறிர்களே…
உங்கள் நோக்கம் தான் என்ன…?
அன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளால் சுடப்பட்டவர் யார் என்று உங்களுக்கு நல்லா தெரியும்…
தமிழின துரோகி துரையப்பா…
தமிழின துரோகி துரையப்பா…
இன்றைய தலை முறை பிள்ளைகளை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளி அவர்களின் பசிக்கு துரோகி என்ற பட்டத்துடன் நீங்கள் இரையாக வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றோம்…
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
தமிழீழ மாணவர் படை