9/19/2013

| |

இதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்பது. அவர்தான் ஈழத்து மோடி ஆச்சே


.பகிரங்க மன்னிப்பு கோருகின்றது யாழ் முஸ்லீம் சமூகம் !

- யாழ் தேர்தல் செய்தியாளர்

“தமிழ் - முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமை முஸ்லீம் சமூகத்தால் உணரப்படாமல் இருந்தது. இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்”- கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் சீ.வி.விக்னேஸ்வரன்இ தினக்குரல் 4.9.2013

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்தியிருந்த முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள்இ “கடந்த காலத்தில் தமிழ்  முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமை முஸ்லீம் சமூகத்தால் உணரப்படாமல் இருந்தது. இப்போது அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்”  எனத் தெரிவித்திருந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிழம்பியுள்ளது. தமிழ் - முஸ்லீம் சமூகங்களிற்கு இடையிலான இன விரிசலுக்கு தனித்து முஸ்லீம் சமூகத்தை மட்டும் குற்றஞ்சாட்டுவது எந்தவகையில் நியாயமானது என முஸ்லீம் அரசியல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்துத் தொழாயிரத்து தொண்ணூறில் அப்போதைய தமிழ் அரசியல் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளினால் உடுத்த துணிகளுடன் இருபத்தி நாலு மணி நேர அவகாசத்தில் வட மாகாண முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கறையை களையவேண்டிய ஒரு தருணத்தில்இ இளைப்பாறிய நீதியரசர் ஒருவர் வரலாறு தெரியாமல் இவ்வாறு இனவாதம் கக்கியிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில்இ வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்று  விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் வட மாகாணத்தில் உள்ள முஸ்லீம் மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டமைப்பினரின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனின்  இக் கருத்துப் பற்றி கவலை தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர்இ “பானையிலுள்ளதுதான் அகப்பையில் வரும். விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த இந்தக் கருத்தின் மூலம் சகோதர முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக இவரது மனதிலுள்ள துவேசம் துல்லியமாகத் தெரிகிறது. சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சேர் பொன் ராமநாதனின் உறவினர் தான் எனப் பெருமை பேசும் இவர் அதனை இப்போது நிரூபிக்க முயல்கிறார்போல் தெரிகிறது. இவர் முதலமைச்சராக வருவது இனச் சிக்கலுக்குத்தான் வழிவகுக்கும்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.