நாளை புதன்கிழமை நியூயோர்க் நேரம் மு.ப 9 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப. 6.30) டுவிட்டர் ஊடாக கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
அரை மணித்தியாலம் நடைபெறும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின்போது நியூயோர்க்கிலிருந ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்த வார நடவடிக்கை பற்றியும் ஐ.நா. அமர்வு பற்றியும் கவனம் செலுத்தப்படும்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இந்த கேள்வி பதில் நிகழ்சியை நெறிப்படுத்துவார்.@PresRajapaksa என்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் ஊடாக இந்த கேள்வி பதில் நிகழ்வு நடைபெறும்.
ஜனாதிபதியிடம் கேள்வி கேட்க ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்விகளை காலதாமதமின்றி பதிவு செய்யவும். உங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும்போது #AskMRஎனப் பதிவு செய்ய வேண்டும்