வடமாகாண சபைக்குரிய அமைச்சரவை தெரிவு குறித்து கூட்டமைப்பின் தலைமைபீடம் கடுமையான மாட்டியுள்ளதாக தெரிய வருகிறது.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகள் தத்தமது பங்கிற்கு ஒவ்வொரு அமைச்சு கேட்டு நிற்கின்றார்கள்.குறிப்பாக சுரேஷ் அணி'ஈ.பி.ஆர்.எல்.எப்.),அடைக்கலம் அணி(டெலோ)சித்தார்த்தர் அணி '(புளட் ) என்று ஒருபுறம் பங்காளிகளின் கோரிக்கை முக்கியத்துவம் பெற்று வருகிறது. மறுபுறம் விருப்பு வாக்கின் அடிப்படையில் தான் அமைச்சு அந்தஸ்துகள் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சாரர் (அனந்தி)விடாபிடியாக நிற்பதாகவும் அதை விட துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கே அமைச்சு பொறுப்புகள் வழங்க பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சம்பந்தரும் நினைப்பதால் நிலைமை கடுமையான குழப்பத்தை நோக்கி நாட்கள் நகருவதாக கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளாரக நிறுத்தப்பட்ட முன்னாள் நீதிபதி சி வி விக்னேஸ்வரன் 1,32,255 வாக்குகள் பெற்று விருப்ப வாக்கு பட்டியலின் முதலிடத்திலுள்ளார்.இரண்டாவதாக அனந்தி சசிதரன் பெற்றுள்ளார்.விருப்பு வாக்கின் அடிப்படையில் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்க பட்டால் ஆனந்திக்கு அமைச்சு பதவி கிடைக்கலாம்.அதிலும் ஒரு பெண் எனும் வகையிலும் அவர் அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. அவர் பெற்ற விருப்ப வாக்குகள் 87,870ஆகும்.
. புளாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் 39,715 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் வந்துள்ளார்.அது மட்டுமல்ல அவரது தகப்பனார் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவரும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்ட அனுபவங்களை கொண்டவர்.நீண்டகால போராட்ட வழிவந்த ஒரு கட்சியின் தலைவரும்கூட. அதுமட்டுமன்றி புளட் சார்பில் யாழ் மாவட்டத்தில் 6.வது இடத்தில் 23,669வாக்குகள் பெற்று வெற்றி ஈட்டிய கஜதீபன் மற்றும் வவுனியா மாவட்டத்தில் 2 வது இடத்தில் 11,901 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற லிங்கநாதன்- போன்றோர் ,புளட் அணியை சேர்ந்தவர்கள் என்பதனால் நிச்சயமாக சித்தார்த்தர் வட மாகாண சபையின் நான்கு அமைச்சர்களில் ஒருவராக நியமனம் பெறுவார் எனவும் அறிய முடிகிறது.