வட மாகாணசபை தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் தீர்மானிக்க வேண்டிய இறுதி தருணத்தில் நிற்கின்றோம்.இனவாத உணர்ச்சி பீறிட்டு வாக்குகளை அளிப்பதில் இருந்து இனியாவது நமது மக்கள் மாற்றம் அடைய வேண்டும்.இலங்கை மக்கள் அனைவரையும் சரிநிகர் சமனாக நடத்தக்கோரும் இடது சாரிகளை ஆதரிக்கும் புதியதொரு அரசியல் மாற்றத்தை தமிழ் மக்கள் ஏற்படுத்த வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கபடுவதும்,பறிக்கப்படுவதும் மத்தியில் அரசியல் அதிகாரத்தை வைத்திருப்பவர்களின் கைகளிலேயே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகார சக்திகளுக்கு வெளியே நின்று தமிழ் தலைமைகள் கொடுக்கும் வெற்றுகுரல்களால் பயன் ஏதும் கிடைப்பதில்லை என்பதை ஏன் நாம் இன்னும் உணர மறுக்கின்றோம்? அந்த மத்தியில் உள்ள அதிகார மையங்களுக்குள் நின்றுகொண்டு கொடுக்கும் குரல்கள் மட்டுமே பயன்பாடானவை.அந்த வகையில் ஆளும் தரப்பில் இருந்து கொண்டு எமக்காக குரல் கொடுப்பவர்கள் இடது சாரிகள் மட்டுமே.குறிப்பாக லங்கா சம சமாஜ கட்சி, கம்யூனிச கட்சி போன்றவை மிக நீண்ட காலமாகவே தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து கவனம் கொண்டு இயங்கி வருபவை.அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இந்த இடது சாரிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றார்கள்.13 வது சட்ட திருத்தம் காப்பாற்ற பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த குரல்களினால் தான் இன்று இந்த வட மாகாண சபை தேர்தலே வந்திருக்கின்றது. தேசிய கீதம் தமிழ் மொழியில் படுவதற்கான உரிமையை இன்று வரை காப்பாற்றி தந்தது இந்த இடது சாரிகளே ஆகும்.இந்த தேர்தலில் அவர்களின் கரங்களை பலப்படுத்த தமிழ் மக்கள் தவற கூடாது.வாசு தேவ நாணயகார,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண போன்ற நேர்மையான அரசியல் வாதிகலை நாம் ஆதரிக்க வேண்டும்.
வட மாகாண சபை தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் இடது சாரிகள் சார்பில் யாழ்.மாவட்டத்தில் தமிழழகன் நடராஜா (இல-14) போட்டியிடுகின்றார்.அவரை ஆதரிப்பது சகல இடது சரிகளினதும் முற்போக்காளர்களினதும் வரலாற்று கடமையாகும்.ஆம் எல்லோரும் எமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை பலப்படுத்துவோம்.