மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மொறட்டுவை சர்வதேச கராட்டி சம்மேளன பிரதம விரிவுரையாளர் பி;. சத்திரசிங்க மட்டக்களப்பு மாவட்ட கராத்தே பயிற்சியாளர் எஸ். பிரகாஸ் ஆகியோர் மாகாணசபை உறுப்பினரால் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ், மாநகர ஆணையாளர் கே. சிவநாதன், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, ஆகியோரால் கராத்தே வீரர்களுக்கான நியமனக் கடிதம், அடையாள அட்டை மற்றும் பயிற்சி உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.
மாவட்ட காரத்தே வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சியளித்து 2014 இல் நடைபெறவுள்ள தேசிய நிகழ்வுக்கு தயார்படுத்துவதே நோக்கம் என மாவட்ட கராத்தே தொழில் நுட்ப விரிவுரையாளர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. லவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.