9/18/2013

| |

வாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரில் மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் வீதிப் புனரமைப்பு பார்வை.

 வாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் வாழைச்சேனை பிரதான வீதிப் புனரமைப்புக்களை நேற்று திங்கட்கிழமை பார்வையிட்டார்.
வாழைச்சேனை பிரதான வீதி அண்மைக்காலமாக புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் வாகன தரிப்பிட வசதியும், நடைபாதையும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கத்தினால் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை நேரடியாக வந்து உரிய அதிகாரிகளை அழைத்து வீதியில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி குறைபாடுகளை தீர்த்து வைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார். 
இதில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சீ.சீ.சஹாப்தீன், வாழைச்சேனை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்க நிருவாகிகளும், வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.