9/10/2013

| |

பாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்

பாகிஸ்தான் அரசுத் தலைவர் அசிஃப் அலி சர்தாரி செப்டம்பர் 8ஆம் நாள், ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவேற்றி, பதவியிலிருந்து விலகினார். பாகிஸ்தான் வரலாற்றில் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிக்காலத்தை நிறைவேற்றிய முதல் அரசுத் தலைவராக அவர் இருக்கிறார்.
பாகிஸ்தான் தேசியப் பேரவை மற்றும் பலவேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம், வேட்பாளர் மம்னூன் ஹுசெய்ன் பெரும்பாலான வாக்குகளுடன், வெற்றி பெற்று உள்ளார். அவர் 9ஆம் நாள் அந்நாட்டின் 12வது அரசுத் தலைவராகப் பதவி ஏற்கிறார்.