தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவே தமிழக அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தைப் போன்று பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனி நாடே தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு என சில தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாகவும் இதனால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் எங்களை நேரடியாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளின் உணர்வுபூர்வமான கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு சேய்வது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் முரண்பட்டுக் கொள்ளும் தாம் மறுநாள் இணைந்து செறய்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் இலங்கைத் தமிழர்கள் மீது காட்டி வரும் அனுதாபம் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்வுத் திட்டம் என்பது உள்நாட்டு ரீதியில் எட்டப்பட வேண்டியதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.