ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி, ராமேஸ்வரத்திற்கு வருகைதந்திருந்த போதிலும் அவரை ஊர்வலகத்தில் பங்கேற்க காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர் என்றும் அந்த செய்திகளிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.