9/18/2013

| |

இன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா கூட்டமைப்பிலிருந்து?

இன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா கூட்டமைப்பிலிருந்து?

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த சப்ராபினான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவான் நடாத்திவந்தார். அவ்வேளையில் யாழ்.மக்கள் கஷ்டப்பட்டு சேமித்த தமது பெருந்தொகையான பணத்தை பல்வேறு தேவைகளுக்காக சப்ரா பினான்சில் வைப்பிலிட்டனர்.
பெரும்பாலானோர் தமது பெண்பிள்ளைகளின் கல்யாணத்திற்காகவும், சிலர் தமது ஓய்வூதியக்கால தேவைகளுக்காகவும் வைப்பிலிட்டனர். சப்ரா பினான்சில் தமது வாயை, வயிற்றை ஒறுத்து சேமித்த பணத்தை வைப்பிலிட்ட மக்கள் தங்களுக்கு வேண்டியபோது எடுத்து தமது பெண் பிள்ளை களுக்கு திருமணத்தை செய்துவைக்கலாம் எனும் நம்பிக் கையில் இருந்த வேளையிலேதான் அவர்களது தலையிலே பேரிடிவிழுந்தது. சப்ரா பினான்சை நடாத்திவந்த சரவண பவான் எமது மக்கள் கஷ்;டப்பட்டு உழைத்து வாயை, வயிற்றை ஒறுத்து வைப்பிலிட்ட கோடிக்கணக்கான பணத்துடன் கொழும்புக்கு ஓடிவிட்டார்.
சிலர் அவரைத்தேடி கொழும்புக்கு சென்றனர். கொழும்புக்குச் சென்றவர்களை ஐக்கிய தேசியக்கட்சி அங்கத்தவரான சரவணபவான் தனது குண்டர்களின் மூலம் விரட்டி அடித்தார். மீண்டும் வந்தால் பொலிசாரிடம் கையளிக்கப் போவதாக மிரட்டப்பட்டார்கள். இந்த இழப்பை தாங்க முடியாத சிலர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சிலர் மனநோயாளிகள் ஆக்கப்பட்டனர். பல பெண்கள் திருமணமின்றியே தமது வாழ்வை முடித்துக் கொண்டனர்.
இந்நிலையிலே தான் பாதிக்கப்பட்ட சிலர் ஒன்றிணைந்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர். நீண்டகால முயற்சியின் பயனாக |இன்ரபோல்| பொலிசாரினால் சரவணபவான் விசாரிக்கப்பட்டுள்ளார். சரவணபவானை இன்ரபோல் விசாரணை செய்வது பாதிக்கப்பட்ட சிலருக்கு ஓரளவு ஆறுதல் தந்தாலும் தாங்கள் வைப்பிலிட்ட பணம் திரும்பிக்கிடைக்குமா? இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெறுவார்களா? போன்ற கேள்விகள் எழுந்தவண்ணமே உள்ளது.
கூட்டமைப்பினரின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சரவணபவானினால் ஏமாற்றப்பட்ட சிலர் தம்மை சரவணபவான் ஏமாற்றியது தொடர்பாக கேள்விகளுக்கு மேல் கேள்விகளை எழுப்புகின்றனர். இது விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் கூட்டங்களுக்கு போகும்போது சரவணபவானை பல வேட்பாளர்கள் தவிர்க்கின்றனர்.
கூட்டமைப்பின் ஆதரவு குறைவதற்கு ஐ.தே.கவில் அங்கம் வகித்த சரவணபவானும் ஒரு காரணம் என பலர் கருதுவதனால் கூட்மைப்பிலிருந்து இடைநிறுத்தவேண்டு மென்ற குரல் பலத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் கூட்டணியினரின் கூட்டங்கள் குழப்பத்தில் முடிவடைவதற்கு சரவணபவான் பிரதான காரணியாக இருந்து வருகின்றார்.