9/11/2013

| |

கரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழைமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக, ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மஹிந்தோதய 1,000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 80 இலட்சம் ரூபா செலவில் இந்த ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின்போது ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூல்களை மாகாண சபை உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கையளித்தார்.